Malaysia

மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் தீடிரென 400% வரை விலை ஏற்றம் !. பினாங்கு இந்து இயக்கம் அதிர்ச்சி தகவல்

பினாங்கு,ஜன.14-
புது வருடம் பிறந்து அனைத்து மதத்தவர்களின் சமயத் திருவழாக்கள் வரும் இந்த தருணத்தில் ‘மலிகைப் பொருட்களின்’ விலைகள் பல மடங்கு விழுக்காடு
வித்தியாசத்தில் விலை ஏற்றம் கண்டுள்ளதாக பினாங்கு இந்து இயக்கத் தலைவர்
டத்தோ
பி. முருகையா கூறினார்.

இதில் குறிப்பாக, ஆலயங்களில் தேவைப்படும் பொருட்கள் அதிக விலையில் விற்கப்படுகிறது. B40 எனப்படும் வறுமை நிலையில் வாழும் ஏழை மக்கள் கடும் சிறமங்களுக்கு ஆளாக நேரிடும் என்பது உறுதி என்று முருகையா தெரிவித்தார்.

சமீப காலமாக இந்த விலை ஏற்றம் குறித்து பினாங்கு இந்து இயக்கத்திற்கு பொது மக்கள் நேரடியாக வந்து புகார்கள் வழங்கினர்.
இதன் அடிப்படையில் இயக்கம் மேற்கொண்ட ஆய்வில் அப் புகார்கள் உண்மையென கண்டறியப்பட்டுள்ளதாக டத்தோ
பி. முருகையா் சொன்னார்.

கடந்த பிப்ரவரி 10ம் தேதியன்று இங்குள்ள சில சில்லரை மற்றும் பெரிய மலிகைக் கடைகளில் சோதனை செய்து பார்த்த போது அப் புகார்களில் உண்மை உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த வருடம் ஆக்டோபர் மாதம் (2024ல்) ஏழு வகையான அத்தியாவசியமாகவும், கட்டாயமாகவும் மக்களுக்கு தேவைப்படும் பொருட்களின் விலையில் சுமார் 400% விழுக்காடு வரை உயர்வு கண்டுள்ளது என்பதை இயக்கம் உறுதிபடுத்துகிறது.

தக்காளிப் பழங்கள் அதிர்ச்சித் தரும் வகையில் வானுயரம் ஏற்றம் கண்டது. முன்பு அப் பழங்கள் கிலோ ஒன்று ரிங்கிட் 1.60 காசுக்கு விற்கப்பட்டது. ஆனால், தற்போது அதன் விலை ஒரு கிலோ ரிங்கிட் 8.00 க்கு விற்கப்படுகிறது. அதாவ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button