Malaysia

PKR கட்சி சுங்கை சிப்புட் தொகுதி தலைவர் பதவிக்கு நோவிந்தன் கிருஷ்ணன் போட்டி தொகுதி வாக்காளர்கள் அந்த ஊடகவியலாளருக்கு வாக்களிக்க கோரிக்கை

சுங்கை சிப்புட், ஏப்.11-
ஒரு கட்சிக்கு மட்டுமன்றி ஒரு தொகுதிக்கு சிறந்த சேவை வழங்குமவராகவும், மக்கள் நலனில் அக்கறை கொண்டவராகவும் இருந்தால் மட்டுமே அவரது இலக்கை அடைய முடியும் என்பது அனைவரின் நம்பிக்கை.

அந்த வகையில் பிகேஆர் கட்சியின் சுங்கை சிப்புட் தொகுதி தலைவர் பதவிக்கு போட்டியிட தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கிறார் நோவிந்தன் கிருஷ்ணன்.

ஒரு ஊடகவியலாளராக வலம் வந்து கொண்டிருக்கும் நோவிந்தன் சமூக ஆர்வலராக தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளார்.நோவிந்தன் தொகுதி தலைவராக வெற்றி பெற்றால் தனக்கு இருக்கும் ஊடக பலத்தை கொண்டு மக்களுக்கு சிறந்த சேவை வழங்க முடியும் என்பது திண்ணம்.

நான் பதவிக்காக போட்டியிடவில்லை. மாறாக மாற்றத்திற்காக போட்டியிடுகிறேன். எப்பொழுதுமே ஜெயிப.பவர்களை காட்டிலும் மாற்றத்திற்காக போட்டியிடுபவர்கள் சிறந்த சேவையை வழங்குவார்கள் என்பது மக்கள் எதிர்பார்ப்பு என்கிறார் நோவிந்தன்.

இந்தத் தொகுதியை சிறந்த முறையில் வழிநடத்த எண்ணம் கொண்டுள்ளேன். வெளிப்படையான மற்றும் முற்போக்கான சிந்தனையில் சுங்கை சிப்புட் தொகுதியை வழிநடத்த அதிகாரப்பூர்வமாக களத்தில் இறங்கியுள்ளதாக நோவிந்தன் தெரிவித்தார்.

புதிய சிந்தனையில் ஒரு சேவை போராட்டத்தை தொடங்கியிருக்கிறேன். இது ஒரு முடிக்கப்படாத போராட்டம். தொகுதி உறுப்பினர்களுக்கு 10 கிலோ மீட்டருக்கு ஒரு நிரந்தர தலைமையகத்தை அமைப்பேன்.

மேலும் தொகுதி உறுப்பினர்களுக்கு காப்பீட்டுத் திட்டம், கல்வி நிதி மற்றும் 16ஆவது பொதுத்தேர்தல் முன்னேடுப்புகள் போன்றவற்றை செய்யவிருப்பநாக நோவிந்தன் சொன்னார்.

நோவிந்தன் கடந்த 6 ஆண்டுகளாக PKR கட்சியில் இணைந்து சேவையாற்றி வருகிறார். பேராக் மாநில தகவல் பிரிவு துணைத்தலைவராக பதவி வகித்து வரும் நோவிந்தன் சுங்கை சிப்புட். தொகுதி தலைவர் பதவி வழி தன் பலத்தை அதிகரித்து கொள்ள முடியும் என்பதில் துளியளவும் சந்தேகமில்லை.

“நான் பதவிக்கு போட்டியிடவில்லை, மாற்றத்திற்காக போட்டியிடுகிறேன்.” இதுவே நோவிந்தன் தாரக மந்திரம்.்நோவிந்தனை தேர்வு செய்வோம், மாற்றத்தை கொண்டு வருவோம். முழு அறிக்கை: www.novinthen.com மில் காணலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button