Malaysia

PKR கட்சி கோத்தா ராஜா தொகுதி தலைவர் பதவி தேர்தல் YB குணராஜை எதிர்த்து மகேந்திரன் மாரிமுத்து போட்டி! மக்கள் ஒரு மாற்றத்தை காண வாக்களிக்க வேண்டும்

தேசம் அதிரடி அலசல் குணாளன் மணியம்

கிள்ளான்,ஏப்.11-
PKR கட்சி கோத்தா ராஜா தொகுதியில் மக்கள் ஒரு மாற்றத்தை காண வேண்டுமானால் கோத்தா ராஜா தொகுதி தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் மகேந்திரன் மாரிமுத்துவுக்கு வாக்களிக்கும்படி வாக்காளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

கட்சியில் எப்பொழுதும் வெற்றி பெறுகிறவர்கள் வெற்றி பெற்றால் அது பிரதான செய்தியாக இருந்தாலும் எப்பொழுதும் தோற்றவர்கள் வெற்றி பெற்றால் அது வரலாறு என்பதை போல தோத்தா ராஜா தொகுயில் மக்கள் ஒரு மாற்றத்தை காண செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் ஜோர்ஜை எதிர்த்து மகேந்திரன் களத்தில் இறங்கியுள்ளார்.

மகேந்திரன் மாரிமுத்து மண்ணின் மைந்தர் ஆவார். கிள்ளானில் 8 வயதில் முதல் வசித்து வருகிறார். மக்கள் வட்டார மண்ணின் மைந்தன் மகேந்திரன் தொகுதி தலைவராக ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும்.

அந்த வட்டாரத்தை சேர்ந்த வேட்பாளர் மட்டுமே மக்கள் பிரச்சினைகளை விரைந்து களைய முடியும் என்று PKR அரசியல் வட்டாரங்கள் கருத்து தெரிவித்துள்ளன.
மகேந்திரன் எந்த பதவியும் இல்லாத நிலையில் மக்களுக்கு சேவை வழங்கி வருகிறார். இவர் கோத்தா ராஜா தொகுதித் தலைவராக வெற்றி பெற்றால் இன்னும் சிறப்பாக சேவையாற்ற முடியும் என்பதில் துளியளவும் சந்தேகமில்லை.

கடந்த 2 தவணைகள் கோத்த ராஜா தொகுதி தலைவராக இருந்து வரும் குணராஜ் அதன் ஒரு உறுப்பினர்களுக்கு எந்த மாற்றத்தையும் கொண்டு வரவில்லை. எதையும் செய்யவில்லை.

YB குணராஜுக்கு 6 ஆண்டுகள் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குணராஜ் உறுப்பினர்களுக்கு எதையும் செய்யவில்லை. உறுப்பினர்களுக்கு சேவை செய்யும் எண்ணத்தோடு களமிறங்கியிருக்கும் தனக்கு ஒரு வாய்ப்பு வழங்கும்படி மகேந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

நான் குணராஜ் அவர்களுடன் இருந்தவன். இப்போது இல்லை ஏன்? நான் மட்டும் இல்லை. அவருடன் இருந்த 90 விழுக்காடு ஆதரவாளர்கள் விலகி விட்டனர். ஏன்? நாங்கள் எதிர் அணியில் இருந்து போட்டியிடுவதற்கு என்ன காரணம்?

இப்போது கூட நான் Mahendran Marimuthu தலைவர் பதவிக்கும், Ustaz Zawawi Mughni துணைத் தலைவர் பதவிக்கும், Nantha Kumar தொகுதி இளைஞர் பிரிவு தலைவர் பதவிக்கும்
Saribanon Saibon மகளிர் அணி் தலைவர் பதவிக்கும் போட்டியிடவிருக்கின்றனர்.
நாங்கள் எதிரணிக்கு போவதற்கு என்ன காரணம்?

இந்த கேள்விகள் உறுப்பினர்கள் மனதில் கண்டிப்பாக எழுந்திருக்கும். மக்கள் மனதில் எழுந்துள்ளதை யாரும் மறுக்க முடியாது. தொகுதி உறுப்பினர்களுக்கு “அதை செய்தேன், இதை செயதேன்” என்று ஊடகவியலாளர் சந்திப்பை நடத்துகிறவர்கள் செயல்வீரர் இல்லை. தொகுதி உறுப்பினர்களுக்கு சேவை செய்ய முன் வருகிறவர்கள் மட்டுமே மக்கள் நலனில் அக்கறை உள்ளவர்கள் என்று மக்கள் நம்புகிறார்கள்.

தொகுதி மக்கள் ஒரு மாற்றத்தை கண்டால் மட்டுமே மேம்பாட்டை காண முடியும். ஏனெனில் அவர் சிந்தனை வேறு மகேந்திரன் சிந்தனை வேறு.

ஆகையால், கோத்தா ராஜா தொகுதி தலைவர் பதவிக்கு களமிறங்கியிருக்கும் மகேந்திரன் மாரிமுத்துவுக்கு வாக்களிக்க வாக்காளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மக்களே மாத்தியோசியுங்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button