Malaysia

ஹலால் சான்றிதழ் சுயவிருப்பதின் போரில். எடுத்துக் கொள்ளலாம் அமைச்சரவை முடிவு டத்தோஸ்ரீ ஜாஹிட் தகவல்

புத்ராஜெயா,செப்.18-
சுய விருப்பத்தின் பேரில் ஹலால் சான்றிதழுக்கான விண்ணப்பங்கள் செய்து கொள்ளலாம் என்று பிரதமர் துறையின் சமய விவகாரங்களுக்கான அமைச்சு புதன்கிழமை நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ ஜாஹிட் ஹமிடி கூறினார்.

ஜாக்கிம், இஸ்லாமிய மத வாரியம், மாநில இஸ்லாமிய சமய விவகாரத் துறையால் மேற்கொள்ளப்படும் மலேசிய ஹலால் சான்றிதழுக்கான விண்ணப்பம் சுயவிருப்பத்தின் பேரில் எடுப்பதாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டதாக டத்தோஸ்ரீ ஜாஹிட் ஹமிடி தெரிவித்தார்.

இந்த ஹலால் விவகாரத்தில் எந்த தரப்பையும் கட்டாயப்படுத்த முடியாது. ஹலால் சான்றிதழுக்கு தன்னார்வத்தின் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம் என அரசாங்கம் முடிவெடுத்துள்ளதாக. டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி மேலும் சொன்னார்.

ம.இ.காவின் 78ஆவது பேராளர் மாநாட்டில் அதன் தேசிய தலைவர் தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button