Malaysia

மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத் தேர்தல் செ.வே.முத்தமிழ்மன்னன் தலைமையில் காளிதாசன் தியாகராஜன், காளிதாசன் இளங்கோவன், ஜீவராஜா, வெங்கடேசா அணியை தேர்வு செய்வீர் தேசம் குணாளன் மணியம் வேண்டுகோள்

கோலாலம்பூர்,செப்.20-
மலேசியத் தமிழ் ப்பத்திரிகையாளர் சங்கத்தின் தேர்தல் செப்டம்பர் 21ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறும் வேளையில் தலைவர் பதவிக்கு நேரடி போட்டி நிலவும் நிலையில் செ.வே.முத்தமிழ் மன்னன் சங்கத்திற்கு பொருத்தமான தலைவர் என்று தேசம் ஊடகத்தின் தோற்றுநர் கூறினார்.

மலேசிய தமிழ்ப்பத்திரிகையாளர் சங்கத்தின் 2024 -2026ஆம் ஆண்டுக்கான பல்வேறு பதவிகளுக்கான தேர்தல் செப்டம்பர் 21ஆம் தேதி நடைபெறவுள்ளது.

மலேசியத் தமிழ்ப்பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் பதவிக்கு அதன் முன்னாள் தலைவர் திரு.செ.வே.முத்தமிழ் மன்னன் 2ஆம் எண்ணில் போட்டியிடுகிறார். சங்கத்திற்கு பொருத்தமான தலைவர் மன்னன் ஆவார். கடந்த முறை 3 தவணைகள் சங்கத்தை சிறப்பான முறையில் வழிநடத்தியது மட்டுமல்லாமல் சங்கத்தின் நிதி வளத்தையும் அதிகரித்தவர் மன்னன் என்று தேசம் ஊடகத்தின் தலைமை ஆசிரியருமான குணாளன் மணியம் தெரிவித்தார்.

மன்னன் தற்போது தினத்தந்தி இணைய ஊடகத்தில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் சங்கத்தின் துணைத் தலைவர் பதவிக்கு தமிலென்ஸ் ஊடகத்தின் நிருபர்
காளிதாசன் தியாகராஜன் எண் 1இல் போட்டியிடுகிறார்.
சங்கத்தின் பொருளாதாரத்தை உயர்த்தும் வாக்குறுதியோடு போட்டியிட களத்தில் இறங்கியிருக்கும் காளிதாசனுக்கு தமது முழு ஆதரவை வழங்குவதாக குணாளன் மணியம் சொன்னார்.

மலேசிய தமிழ்ப்பத்திரிகையாளர் சங்கத்தின் உதவித் தலைவர் பதவிக்கு காளிதாசன் இளங்கோவன் எண் நான்கிலும்
எஸ். ஜீவராஜா ஐந்திலும் செ.வெங்கடேசா எண் மூன்றிலும் போட்டியிடுகின்றனர்.
மலேசியத் தமிழ்ப்பத்திரிகையாளர் சங்கத்தின் தேர்தலில் மேற்கண்ட அணியினர் சங்கத்தை சிறந்த முறையில் நடத்துவர் என்பது திண்ணம் என்றார் குணாளன் மணியம்.

மலேசியத் தமிழ்ப்பத்திரிகையாளர் சங்கத்தின் ஆண்டு கூட்டம் மற்றும் தேர்தல் செப்டம்பர் 21ஆம் தேதி சனிக்கிழமை காலை 9 மணிக்கு ஜெயபக்தி மண்டபத்தில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.a

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button