
மஇகா தலைமையகத்தில் பொங்கல் விழா தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தலைமையில் விமரிசையாக நடைபெற்றது
கோலாலம்பூர், ஜன.14-
மலேசிய இந்திய சமுதாயத்தின் சமூக, பொருளாதார, கல்வி மேம்பாட்டிற்கு 2025 பொங்கல் திருநாள் உறுதுணையாக அமைய வேண்டும் என்று தான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்திய சமுதாயத்திற்கு இன்றைய அவசியத் தேவை ஒற்றுமையும் ஒருங்கிணைப்பும் என்பதால், நாம் அனைவரும் ஒரு குடையின்கீழ் ஒருமித்து செயல்படுவதில் அக்கறை கொள்ள வேண்டும் என்று மஇகாவின் தலைமையகத்தின் அருகில் உள்ள ஆலயத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் அவ்வாறு தெரிவித்தார்.
அரசியல் ரிதியாக, மலேசிய இந்தியர்கள் வெவ்வேறு பாதையில் பயணித்தாலும் சமூக அளவில் நாம் ஒற்றுமையுடன் திகழ்ந்தால்தான், சமுதாயம் பயனடையும்.
இந்திய சமுதாய மக்கள் ஈடுபடும் அனைத்து காரியங்களிலும் வெற்றிடைய வேண்டும்.
என்று தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.
மஇகாவின் பொங்கல் விழா கட்சியின் தேசியத் தலைவர் தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தலைமையில் காலையில் விமரிசையாக நடைபெற்றது.
மலேசிய வாழ் தமிழர்கள் பொங்கல் விழாவை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வரும் வேளையில் ம.இ.கா தலைமையகத்தில் பொங்கல் விழா நடைபெற்றது.
இதில் மூன்று பானைகளில் பொங்கல் வைக்கப்பட்டு பின் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த பொங்கல் விழாவில்
மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், துணைத் தலைவர் டத்தோஸ்ரீ சரவணன், கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் உட்பட பலர் இவ்விழாவில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.



