
இந்திய சமுதாயத்தின் உன்னத தலைவர்… முற்போக்கு சிந்தனையாளர்… அடுத்த தலைமுறைக்கு அடித்தளம் அமைத்தவர் இந்திய சமுதாயத்தின் குறை தீர்க்க போராடிக் கொண்டிருக்கும் தலைவர் தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன்
கோலாலம்பூர்,டிச.2-
இந்திய சமுதாயத்தின் இதய துடிப்பாக பார்க்கப்படும் ம.இ.கா தேசியத் தலைவர் தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் இந்திய சமுதாயத்தின் உன்னத தலைவராக கருதப்படுகிறார்.
வினை தீர்ப்பவர் விநாயகர் என்றால் இந்திய
சமுதாயத்தின் குறை தீர்ப்பவர் விக்னேஸ்வரன் என்றால் அது மிகையில்லை.
எம்.சன்னாசி-ருக்குமணி தம்பதியர் பெற்றெடுத்த முத்துரத்தினமான விக்னேஸ்வரன் 30 ஆண்டுகளுக்கு முன்பு தந்தை வழியில் அரசியலில் சாதாரண தொண்டராக களமிறங்கினார்.
வேகம் விவேகத்தோடு செயல்பட்டதால் இளைஞரணி தலைவரானார். பின்னர் தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்ற செயலாளர் ஆனார். இவரது ஆற்றல் இவரை உச்சிக்கு கொண்டு சென்றது. ஆம், செனட்டராகி மேலவை தலைவர் ஆனார்
ம.இ.காவின் தலைமகன்-தங்கமகன்
மக்கள் மனதில் இடம்பிடித்ததால் மக்கள் தலைவராக மேலவையில் உயரத்தில் அமர்ந்த நீங்கள் ஏழை மக்களுக்கு வாரி வழங்கிய வள்ளலாக போற்றப்பட்டீர்கள்.
உங்களிடம் உதவி நாடி வந்தவர்களிடம் நின்று பேசி நம்பிக்கையை விதைத்த மாபெரும் தலைவர் நீங்கள்…
MIED வழி இலவச கல்வி வழங்கியவர் நீங்கள்…
லட்சக்கணக்கில் மருத்துவ நிதி வழங்கியவர் நீங்கள்…
கோவிட் காலத்தில் தமிழ்நாட்டில் தத்தளித்தவர்களை தனி விமானங்களில் கொண்டு வந்தவர் நீங்கள்…
இந்திய பிள்ளைகளுக்கு வேலை வாய்ப்பை வழங்கியவர் நீங்கள்…
பொருளாதார பிரச்சினையில் சிக்கியவர்களை மீட்டவர் நீங்கள்…
கலைஞர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் கலைத்தந்தை நீங்கள்…
இந்திய சமுதாயத்தின் பிரச்சினைகளை தன் பிரச்சினையாக கருதி தீர்வு கண்ட செயல்வீரர் நீங்கள்…
மொத்தத்தில் இந்த தேச இந்திய சமுதாயத்தின்
இதய துடிப்பு நீங்கள்…



