Malaysia

என்னை கேட்காதீர்கள் -துணையமைச்சர் டத்தோ ரமணன்

சுங்கைபூலோ, ஜன.29-

ஓய்வூதியம் குறித்து என்னை எதுவும் கேட்காதீர்கள் என்று தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துறை துணையமைச்சர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் கூறினார்.

நான் சுங்கைபூலோ நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதில் இருந்து சம்பளம், அலவன்ஸை போன்றவற்றை என் சொந்தத்திற்கு பயன்படுத்தியது இல்லை என்பதால் ஓய்வூதியம் குறித்து கருத்துரைக்க நான் விரும்பவில்லை என்று டத்தோ ரமணன் தெரிவித்தார்.

அரசியல் தலைவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட ஓய்வூதியத்தை எடுத்துக் கொள்வதை நிறுத்த வேண்டும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தி இருந்தார். இதுகுறித்து கருத்து கேட்ட போது டத்தோ ரமணன் கருத்துரைக்க மறுத்து விட்டார்.

அரசு பணியாளர்களுக்கான ஓய்வூதியத்தை ரத்து செய்வதற்கான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. என் சம்பளம், அலவன்ஸுகள் அனைத்தும் சுங்கைபூலோ நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள வழிபாட்டு தளங்களுக்கு வழங்கி வருகிறேன்.

இதில் இருந்து ஒரு ரிங்கிட்டை கூட எனது சொந்த செலவுக்காக பயன்படுத்தியது இல்லை. அதனால் இந்த விவகாரம் குறித்து கருத்துரைக்க நான் விரும்பவில்லை என்று டத்தோ ரமணன் சொன்னார்.

தேசம் செய்திகள் ரேவதி குணாளன்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button