Malaysia

நாடு தழுவிய நிலையில் 127 இடங்களில் ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் வகுப்புகள் மீண்டும் தொடங்கும் ஸ்ரீ முருகன் கல்வி நிலைய இணை இயக்குநர் சுரேன்திரன் கந்தா தகவல்

தேசம் செய்திகள் ரேவதி குணாளன் ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்

பெட்டாலிங் ஜெயா,ஜன.28-

நாடு தழுவிய நிலையில் 127 இடங்கள் அடையாளம் காணப்பட்டு அதில் ஸ்ரீ முருகன் கல்வி நிலையங்கள் மீண்டும் செயல்பட தொடங்கும் என்று அதன் இணை இயக்குநர் சுரேந்திரன் கந்தா கூறினார்.

மேலும் எஸ்.டி.பி.எம். மாணவர்களுக்கான கருத்தரங்கு அடுத்த மாதம் பிப்ரவரி 17, 18ஆம் தேதிகளில நடைபெறவுள்ளது. இதில் முக்கியமாக
கடந்த பல ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த
பிரிக்பீல்ட்ஸ் வட்டாரத்தில் மிகவும் பிரபலமான ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் எதிர்வரும் மார்ச் மாதம் மீண்டும் செயல்பட தொடங்கும் என்று செய்தியாளர் சந்திப்பில் சுரேன் கந்தா தெரிவித்தார்.

இந்திய சமுதாயம் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும். அதற்கு கல்வி மிகவும் முக்கியம். அதை கருத்தில் கொண்டே ஸ்ரீ முருகன் நிலையம் இந்த கல்வி புரட்சியை மீண்டும் தொடங்குகிறது என்று அதன் சுரேன் கந்தா சொன்னார்.

இதுநாள் வரையில் மாணவர்கள் எங்களை தேடி வந்தார்கள். இந்த 2024ஆம் ஆண்டில் நாங்கள் நாடு தழுவிய நிலையில் மாணவர்களை தேடிச் செல்வோம். இதற்காக 200 பல்கலைக்கழக மாணவர்கள் மாணவர்களை அணுகுவார்கள் என்று சுரேந்திரன் சொன்னார்.

நமது மாணவர்கள் கல்வி வழி புரட்சியை ஏற்படுத்த வேண்டும். இந்தியர்கள் எதற்கும் சளைத்தவர்கள் அல்லர். தஞ்சாவூர் பெரிய கோவிலை கட்டியவனும் தமிழன்தான். அங்கோர்வார்ட் கோவிலை கட்டியவனும் தமிழன்தான். இங்கிலாந்து நாட்டின் பிரதமராக ஒரு இந்தியரான ரிஷி சுனாக் உள்ளார். கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக சுந்தர் பிச்சை உள்ளார்.

இப்படி சாதித்தவர்கள் இந்தியர்கள். அந்த வரிசையில் ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் தோற்றுநர் தான்ஸ்ரீ டாக்டர் தம்பிராஜாவும் உள்ளார் என்று பலத்த கரகோஷத்திற்கு மத்தியில் சுரேன் குறிப்பிட்டார்.

ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தில் ‘முன்னேற்றம் நம் உரிமை’ நிகழ்வு ஜனவரி 28 ஞாயிற்றுக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக தேசிய எஸ்.டி.பி.எம். கருத்தரங்கு அடுத்த மாதம் பிப்ரவரி 17 & 18 அன்று நடைபெறவுள்ளது. அதுமட்டுமின்றி, நாடு முழுவதும் SMC நிலையங்கள் செயல்படவுள்ளன. முக்கியமாக கோலாலம்பூரிலுள்ள பிரிக்பில்டஸ் நிலையத்தின் பதிவு நாள் எதிர்வரும் மார்ச் 31ஆம் தேதியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் டத்தோ புரவி, ம.இ.கா உதவித் தலைவர் டத்தோ கோகிலன் பிள்ளை, டத்தோ காசி, போலந்து நாட்டிற்கான மலேசிய தூதர் டத்தோ சித்ராதேவி உள்ளிட்ட பிரமுகர்களுடன் 100 பேர் கலந்து கொண்டனர்.

தேசம் செய்திகள் ரேவதி குணாளன்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button