Malaysia

2025 மற்றும் 2026 ஆண்டுகளில் மலாக்கா மாநில சுற்றுலாத்துறை ஒருபோதும் ‘ஓய்வெடுக்காது’ கவிஅரசன் அன்பரசன்

மலாக்கா ,ஏப்.18-
15 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களையும் சுற்றுலாப் பயணிகளையும் வெகுவாக ஈர்த்த 2024 ஆம் ஆண்டுக்கான மலாக்காவிற்கு வருகைப்புரியும் ஆண்டு வெற்றியைத் தொடர்ந்து, மலாக்கா சுற்றுலாத்துறை கடந்தாண்டு முழு முயற்சியோடு இத்திட்டத்தை மீண்டும் தொடங்கியது. இந்த தொடர் வெற்றியைத் தொடர்ந்து,மாநில அரசு 2025 மற்றும் 2026 மலாக்காவிற்கு வருகைப்புரியும் ஆண்டாக நீட்டிக்க மாநில முதலமைச்சர் டத்தோஸ்ரீ உத்தாமா அப்துல் ரவூப் யூசோப் கூறினார்.

வருகின்ற செப்டம்பரில் , அனைத்துலக சுற்றுலா தினம் மற்றும் சுற்றுலா மாநாடு 2025 ஆகியவற்றை நடத்த மலேசியாவை பிரதிநிதித்து மலாக்கா மாநிலம் தேர்ந்தெடுக்கப்படும்போது அது தொடர்ந்து ‘உலகளாவிய’ நிலையை அடையும் என்பதால், இந்த ஆண்டு மாநிலத்தின் சுற்றுலாத் துறை ‘ஓய்வெடுக்காது’ என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.

2026 ஆம் ஆண்டு மலேசியா வருகைக்கான வெளியீட்டு இடமாக மலாக்காவைத் தேர்வுசெய்ய மத்திய அரசும் ஒப்புக்கொண்டுள்ளது. சுற்றுலாத் துறையை தொடர்ந்து வலுப்படுத்துவதற்கான முயற்சிகளில் மாநில அரசு தீவிரமாக இறங்கியுள்ளது.மகிமை நிறைந்த பல பிரமாண்டமான நிகழ்வுகளில் மலாக்கா தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மலாக்காவை இந்த நாட்டில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் ஒரு திறம்பட மாநிலமாக மாற்றியுள்ளது என்பதை மலாக்கா மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதனை முதலமைச்சர் நினைவுபடுத்தினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button