Malaysia

Ayer Kuning சட்டமன்ற தொகுதியில் தொலைதொடர்பு சேவை தரத்தை உயர்த்த அறிவுறுத்தல் MCMC-இன் கடும் நடவடிக்கை:

 

தாப்பா, ஏப்.17-
Ayer Kuning சட்டமன்ற தொகுயில் உள்ள 27 இடங்களில் பலவீனமான இணையம் மற்றும் தொலைதொடர்பு சேவைகள் குறித்து தகவல் தொடர்பு அமைச்சர் YB டத்தோ ஃபஹமி ஃபட்சில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த கண்டனத்தை தொடர்ந்து தகவல், தொடர்பு மற்றும் பல்லூடக துறையான MCMC உடனடி நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.
முன்னுரிமைப் பகுதிகளாக கீழ்கண்ட இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

CelcomDigi, Maxis, Telekom Malaysia, U Mobile, YTL உள்ளிட்ட அனைத்து தொலைதொடர்பு சேவை நிறுவனங்களும், MCMC-இன் வழிகாட்டுதலுக்கு இணங்க, ஸ்டேஷன் ஆப்டிமைசேஷன், தற்காலிக டிரான்ஸ்மிட்டர்கள் நிறுவுதல், மற்றும் ஒருங்கிணைந்த உள்கட்டமைப்பு பகிர்வு போன்ற மேம்பட்ட செயல் திட்டங்களை சமர்ப்பித்துள்ளன.

MCMC, 12 முதல் 26 ஏப்ரல் 2025 வரை, PPD Batang Padang, Tapahவில் புகார் மையம் ஒன்றை நிறுவியுள்ளது. இது காலை 9:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை திறந்திருக்கும். இங்கு தொலைதொடர்பு, தபால் சேவை மற்றும் MCMC-இன் அதிகாரத்திற்குட்பட்ட பிற பிரச்சினைகள் குறித்து பொதுமக்கள் புகார்களை சமர்ப்பிக்கலாம்.

MCMC, தொலைதொடர்பு சேவைகளின் தரத்தை தினசரி கண்காணித்து, புதிய புகார்களை உடனடியாக தொடர்புடைய நிறுவனங்களுக்கு அனுப்பும் என தெரிவித்துள்ளது. “விதிமுறைகளை மீறும் நிறுவனங்கள் கண்டிப்பாக தகவல் தொடர்பு பல்லூடக சட்டம் 1998இன் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று MCMC எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button