
சின் சியூ நாளிதழுக்கு எதிராக சட்டம் 1963 சின்னங்கள், பெயர்கள் மற்றும் அச்சு, அச்சக சட்டம் 1984இன் விசாரணை மலேசிய உள்துறை அமைச்சு கடும் நடவடிக்கை
புத்ரஜெயா,ஏப்.17-
சீன அதிபர் ஜிங் பிங் வருகையின் போது சின் சியூ நாளிதழ் தனது முதல் பக்கத்தில் வெளியிட்ட செய்தியில் மலேசிய கொடியில் பிறை இல்லாத கொடியை வெளியிட்டது தொடர்பில் உள்துறை அமைச்சு கடுமையான வீசாரணை நடவடிக்கையை முடுக்கி விட்டுள்ளது.
இந்த மலேசிய கொடியில் பிறை இல்லாமல் முழுமையற்ற நிலையில் கொடி படத்தை சின் சியூ வெளியிட்டிருந்தது. இது குறித்து KDN கடுமையான விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் சின்னங்கள், பெயர்கள் சட்டம் 1963Akta கீழ் (தேவையில்லாமல் பெயரை மாற்றுவது) மற்றும் அச்சு, அச்சக சட்டத்தின் கீழ் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
1998-ம் ஆண்டின் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக சட்டத்தின் கீழ் விசாரணை நடைபெறும் நிலையில் இந்த வழக்குக்கும் உள்துறை அமைச்சுக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என உள்துறை அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.
“இந்த சம்பவம் அச்சிடப்பட்ட ஊடகத்துடன் தொடர்புடையது. எனவே, அச்சு அச்சக சட்டம் 1984இன் கீழ் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும். இது டிஜிட்டல் அல்லது இணைய சட்டத்தின் கீழ் வராது என்று உள்துறை அமைச்சு கூறியது”
சம்பவத்தின் தீவிரத்தன்மை காரணமாக, உள்துறை அமைச்சு சின் சியூ நாளிதழு் நிர்வாகத்திற்கு “காரணம் கோரும்” கடிதம் வழங்கியுள்ளது. தேசிய சின்னங்களுக்கு மரியாதை காட்டாதது மற்றும் சமூக ஒற்றுமையைப் பாதிக்கும் எந்தவொரு வெளியீட்டையும் உள்துறை அமைச்சு சகித்துக்கொள்ளாது என அது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சின்னங்கள் மற்றும் பெயர்கள் சட்டம் தேசிய சின்னங்களின் தவறான பயன்பாட்டை தடுக்கும் ஒரு சட்டமாகும்.
அச்சு, அச்சக சட்டம் 1984 அச்சு ஊடகங்களின் கட்டுப்பாட்டிற்கான சட்டமாகும்.
இந்த வழக்கிற்கு தகவல் தொடர்பு சட்டம் 1998 பொருந்தாது. இந்த வழக்கு
விசாரணை முடிந்ததும், அது தொடர்பான சட்டத்தின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உள்துறை அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.



