Malaysia

கிராமங்கள் கால்நடை பிராணிகள் ஆகியவற்றை டிஜிட்டல் மயமாக்கிய மலாக்கா மாநிலம் ! கவிஅரசன் அன்பரசன்

 

மலாக்கா , ஏப்.18-
தற்போதைய புதிய சகாப்தத்திற்கும் நவீனத்துவத்திற்கு பிறகு பல முயற்சிகளின் முன்னோடியாக மலாக்காவிலுள்ள கிராமங்கள் மற்றும் கால்நடைகளை டிஜிட்டல் மயமாக்கிய முதல் மாநிலமாக மலாக்கா திகழ்கிறது என்பதனை முதலமைச்சர் டத்தோஸ்ரீ உத்தாமா ரவுப் கூறினார்.

தமது சிந்தனையில் நீண்ட காலமாக நிழலாடிய வேளையில் இவை மலாக்காவில் உள்ள பாரம்பரிய கிராம முகவரிகளை தரப்படுத்துவதற்கான முயற்சியாகவும் இவை அமைவதாக முதலமைச்சர் உறுதிப்படுத்தினார்.

டிஜிட்டல் கிராமத்துடன், அனைத்து கிராமங்களுக்கும் வீட்டு எண்கள்,அதன் பாதைகளுக்கு ஏற்ப QR குறியீடுகள் பொருத்தப்பட்டு புதிய முகவரி வழங்கப்படும்.வடக்கு நோக்கிய ஒவ்வொரு வீட்டிற்கும் ஒற்றைப்படை எண்களும், வலதுபுறத்தில் உள்ள வீடுகளுக்கு இரட்டை எண்களும் வழங்கப்படும்.ஒவ்வொரு பாதைகளுக்கும் பெயரிடப்பட்டு ஒரு சிறந்த சமூக மேலாண்மை நிர்வாக அமைப்பை உருவாக்க முடியும் என்பதனை அப்துல் ரவுப் சுட்டிக்காட்டினார்.

டிஜிட்டல் கிராம முயற்சியைத் தொடர்ந்து, சாலைப் பயனாளர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் கால்நடை விலங்குகளின் பிரச்சினையைச் சமாளிக்க, மாநில அரசு மற்றொரு புதிய முயற்சியை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு கால்நடைகளுக்கும் QR குறியீடும் அவரவர் உரிமையாளரும் தங்கள் கால்நடைகளைப் பதிவு செய்ய மூன்று மாத கால அவகாசம் அளிக்கப்படுவதாகவும்,தவறினால், தெருவில் திரியும் விலங்குகளைப் பறிமுதல் செய்து ஏலத்திற்கு விடலாம் என்றும் அவர் கூறினார்.இவையனைத்தும் மக்களின் நல்வாழ்வுக்காக மலாக்கா மாநிலம் பிரத்தியேகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அப்துல் ரவுப் தெரிவித்தார்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button