Malaysia

மலேசியாவில் முதன்முறையாக “பனிசறுக்கு தீம் பார்க்” மலாக்காவில் அமைக்கப்பட்டுள்ளது கவிஅரசன் அன்பரசன்

மலாக்கா , ஏப்.18-
மலேசியாவின் சுற்றுலாத்துறையை மேலும் துரிதப்படுத்தும் வகையில் முதல் பனிசறுக்கு தீம் பார்க் இப்போது மலாக்காவில் செயல்பட்டு வருகிறது,அடுத்த செப்டம்பரில் திட்டமிடப்பட்டுள்ள உலக சுற்றுலா தினம் மற்றும் 2025 ஆம் ஆண்டின் உலக சுற்றுலா மாநாட்டை நடத்த மலாக்காவைத் தேர்ந்தெடுப்பதோடு இணைந்து அறிமுகப்படுத்தப்பட்ட சுற்றுலாத் தயாரிப்புகளில் இந்தப் புதிய சுற்றுலாத் தயாரிப்பும் ஒன்று என்று முதலமைச்சர் டத்தோஸ்ரீ உத்தாமா அப்துல் ரவூப் யூசோப் கூறினார்.

இந்த தீம் பார்க்கில் ஜோங்கர் வாக், கம்போங் மோர்டன் மற்றும் சிவப்பு கட்டடம் போன்ற மாநிலத்தின் முன்னணி சுற்றுலா சின்னங்களும் இடம்பெற்றுள்ளன.பெரியவர்களுக்கு வெ 48, குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு வெ 43, மாற்றுத்திறனாளிகளுக்கு வெ 10 டிக்கெட்டுகள் விற்கப்படுகின்றன.இந்த தீம் பார்க் பொது விடுமுறை உட்பட ஒவ்வொரு நாளும் இயங்கும் மற்றும் மதியம் 1 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்

இந்த புதிய தீம் பார்க் பார்வையாளர்களையும் சுற்றுலாப் பயணிகளையும் ஈர்க்கும் வகையில் மலாக்காவில் பன்முகத்தன்மையை மேம்படுத்தும்.ஏனெனில் மலாக்காவிற்கு வருகைப்புரியும் ஆண்டு தற்போது 2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button