Malaysia

கட்சியின் கடைநிலை உறுப்பினராக மக்கள் பணி தொடங்கிய அனிதா செபுத்தே கெஅடிலான் தொகுதி தலைவருக்கு மீண்டும் போட்டியிடுகிறார்

செபுத்தே, ஏப்.18-
கட்சியில் உறுப்பினராக மக்கள் சேவையை தொடங்கியவர் அனிதா வேலாயுதம் பிள்ளை. கடந்த 10 வருடங்களாக கட்சியிலிருந்து மக்களுக்கு பொதுப்பணியற்றியவராவார்.

செபுத்தே தொகுதி மக்களுக்கு இவர் வழங்கிய சேவைகள் அளப்பரியது.
கடந்த முறை செபுத்தே கெஅடிலான் தொகுதி தலைவராக வெற்றி பெற்றதே அதற்கு தக்க சான்றாக விளங்குகிறது.

வருகின்ற 19 ஏப்ரல் 2025-இல் நடைபெறவிருக்கும் செபுத்தே கெஅடிலான் தொகுதி தேர்தலில் அனிதா தனது தொகுதி தலைவர் பதவியை தக்க வைத்துக் கொள்ள மீண்டும் போட்டியிடுகிறார்.
தனது தொகுதி மக்களுக்கு நிறைவான சேவைகளையும் தூரநோக்கு திட்டங்களையும் வழங்குவதற்கே மீண்டும் செபுத்தே கெஅடிலான் தொகுதித் தலைவருக்கு போட்டியிடுவதாக அனிதா வேலாயுதம் பிள்ளை கூறினார்.

மக்கள் மனங்களில் நீங்காத இடம் பிடித்த இவர் கெஅடிலான் கட்சி ஸ்ரீகண்டி தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.

கட்சியின் நன்மைக்கும் வளர்ச்சிக்கும் பெரிதும் சேவையாற்றிருப்பதாக கூறிய இவர், மக்களுக்கும் கல்வி உதவி, மருத்துவ உதவி, இயற்கை பேரிடர் கால உதவி என கால நேரம் பாராமல் சேவையை வழங்கியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

செபுத்தே தொகுதி மக்களின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி வளர்ச்சிக்கு இன, மத பேதமின்றி தொடர்ந்து சேவையாற்றுவேன் என்றார் அனிதா.

மேலும் ஒற்றுமை மடானி அரசாங்கத்தின் கொள்கைப் படி மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கு மாற்றங்களையும் திட்டங்களையும் கொண்டுவர லட்சியம் கொண்டுள்ளதால், தொகுதியிலுள்ள உறுப்பினர்கள் தங்களது வாக்குகளை தனக்களித்து மக்களுக்கு சேவையாற்ற வாய்ப்பினை வழங்க வேண்டும் என்று அனிதா கேட்டுக் கொண்டார்.

இவரை தொடர்ந்து அனிதா அணியிலிருந்து டத்தோ டாக்டர் வோங் ருஏங் யுவான் துணைத் தலைவருக்காவும் மற்றும் ஹிஷாமுடின் முகமட் ஹல் ஹஜா உதவித் தலைவருக்காக போட்டியிடுகிறார்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button