Malaysia

கோலசிலாங்கூர் தொகுதி மக்களுக்கு தொடர்ந்து நிறைவான சேவைகளை வழங்குவேன் -புதிய தலைவர் சிவபாலன் அறிவிப்பு

 

கோலசிலாங்கூர், ஏப்.18-
மிகவும் பரபரப்பாக நடைபெற்ற கோல சிலாங்கூர் தொகுதி sகெஅடிலான் தேர்தலில் யாருமே எதிர் பாராத வகையில் சிவபாலன் முகுந்தன் வெற்றி பெற்று அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

இம்முறை தொகுதி தலைவர் பதவிக்கு மொத்தம் ஆறு பேர் போட்டியிட்டனர். இதில் மண்ணின் மைந்தர் என்று வர்ணிக்கப்படும் சிவபாலன் 1,498 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

வெற்றி பெறுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தீபன் சுப்பிரமணியம் 1,061 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.
சிவபாலன் அணியில் கோலசிலாங்கூர் தொகுதி கெஅடிலான் இளைஞர் அணி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட முருவிந்தன் மோகன் வெற்றி பெற்றார்.வெற்றி பெற்ற இருவருக்கும் கோலசிலாங்கூர் தொகுதி கெடிலான் உறுப்பினர்கள் மாலைகள் அணிவித்து சிறப்பு செய்தனர்.

இதனிடையே கோலசிலாங்கூர் தொகுதி மக்களுக்கு நிறைவான சேவைகளை தொடர்ந்து வழங்குவேன் என்று சிவபாலன் தெரிவித்தார்.

என் மீது நம்பிக்கை வைத்து வெற்றி பெற செய்த உறுப்பினர்களுக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று அவர் சொன்னார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button