
Zurich காப்புறுதி முகவர்களுக்கு அங்கீகாரம் -எம்.செல்வராஜன் ஏஜேன்சி வழங்கினர்
ஈப்போ, ஜூலை 14-
காப்புறுதி முகவர்களில் பலர் இன்று வாழ்க்கையில் முன்னேறி வருகின்றனர்.
அவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் சுரிக் காப்புறுதி நிறுவனத்தின் முகவர் கிளையாக இருக்கும் எம்.செல்வராஜன் ஏஜேன்சி தன்னுடைய வழிக்காட்டலில் இருக்கும் முகவர்களுக்கு அங்கீகாரம் வழங்கினார்.
இந்த சிறப்பான நிகழ்வு ஈப்போ சுரிக் காப்புறுதி நிறூவனத்தின் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மேலும், மாதந்தோறும் அதிகமான காப்புறுதி சேவையை விற்பனை செய்த முகவர்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் சுரிக் காப்புறுதி நிறுவனத்தை சேர்ந்த மிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
அதனுடன், பினாங்கு மாநிலத்திலிருந்து சிறப்பு பேச்சாளரும் கலந்து கொண்டார்.
நாம் வாழ்க்கையில் ஒரு நிலையை அடைய வேண்டும் என்றால் பங்களிப்பு மிக முக்கியம் என எம்.செல்வராஜன் தெரிவித்தார்.
தொடர் முயற்சி இருந்தால் தான் வாழ்க்கையில் வெற்றி எனும் கனியை பறிக்க முடியும். இந்த நிகழ்வில் சாதனையாளர்களுக்கு விருது வழங்கப்பட்டது.
சுரிக் காப்புறுதி நிறுவனத்தின் முகவர்களாக விரும்புவர்களும் காப்புறுதி திட்டங்களை பெற விரும்புவர்களும் 0125260873 எம்.செல்வராஜன் என்பவரை தொடர்புக் கொள்ளலாம்.



