
133 ஆண்டுகால தம்புன் தேவ ஸ்ரீ முனிஸ்வரர் ஆலயத்தின் அடிக்கல் விழா
- ஈப்போ, ஜூலை 14-
பேரா, தம்புன் ஆறாவது மைலில் எழுந்தருளியுள்ள அருள் மிகு தேவஸ்ரீ முனிஸ்வரர் ஆலயத்தின் அடிக்கல் நாட்டு விழா ஜூலை 14 திங்கட்கிழமை ஆலயத் தலைவர் கோ. சத்தியராஜ் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
அரசாங்க நிலத்தில் கட்டபட்டிருந்த இந்த ஆலய நிலப் பிரச்சனைக்கு மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் அ. சிவநேசன் அவர்களின் பெரும் முயற்சியால் தீர்வு பிறந்துள்ளது.
இந்த ஆலயம் இங்கு 133 ஆண்டுகள் அரசாங்க நிலத்தில் தம்புன் ஆறாவது மைலில் உள்ள பிரதான சாலையில் அமைந்துள்ளது.

இந்த ஆலயம் உள்ள ஆலய பகுதியில் மேம்பாடு திட்டங்கள் மேற்கொண்டு வருவதால் அந்த ஆலயத்தை அகற்ற நடவடிக்கை நில அலுவலகம் மேற்கொண்டது.
இந்த விவகாரம் மாநில ஆட்சிக் குழு உறுப்பினரும் இந்திய விவகாரங்களுக்கு தலைவருமான சிவநேசனின் கவனத்திற்கு அண்மையில் கொண்டுச் செல்லப்பட்டது.
ஆலயத்திற்கு வருகை புரிந்த அவர் அந்த ஆலயம் அருகில் உள்ள மகா மாரியம்மன் ஆலயம் அருகில் உள்ள புதிய நிலத்தில் நிர்ரமாணிக்க அடையாளம் காணப்பட்டது.
அந்த நிலத்தில் நிலத்தை இடமாற்றம் செய்ய சிவநேசன் மேற்கொண்ட உந்துதலில் புதிய இடம் உறுதி செய்யப்பட்டதாக ஆலயச் செயலாளர் கதிரவன் நாகப்பன் நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.
இந்த ஆலய திருப்பணி சுமார் 2 லட்சம் ரிங்கிட் தேவைப்படுகிறது. இங்கு நடைபெற்ற அடிக்கல் நாட்டி விழாவில் கலந்துக்கொண்ட ஆலயத்தின் முன்னாள் தலைவர் டத்தோஸ்ரீ கண்ணப்பா 5 ஆயிரம் ரிங்கிட் வழங்குவதாக அறிவித்தார்.
இந்த ஆலயத்தின் திருப்பணி அடுத்தாண்டு பிப்ரவரி் மாதம் நிறைவுப் பெறும் என்று கதிரவன் கூறினார்..
தற்பொழுது ஆலய நிர்வாகத்திடம் 50 ஆயிரம் ரிங்கிட் உள்ளது. எஞ்சிய நிதி கோரிக்கையை சிவநேசனின் கவனத்திற்கு கொண்டுச் செல்லப்படும் என்று கதிரவன் தெரிவித்தார்.



