Malaysia

ஸ்கூடாயில் எஸ்.பி.எம். இலவசக் கல்விப் பயிலரங்கு

ஸ்கூடாயில் எஸ்.பி.எம். இலவசக் கல்விப் பயிலரங்கு

ஸ்கூடாயில் எஸ்.பி.எம். இலவசக் கல்விப் பயிலரங்க

 

ஸ்கூடாய், ஜூலை 14-

ஸ்கூடாயில் எஸ்.பி.எம். இலவசக் கல்விப் பயிலரங்கு

ஜொகூர் ம.இ.கா. இஸ்கந்தார் புத்ரி தொகுதி ஏற்பாட்டில் இவ்வாண்டு இறுதியில் எஸ்.பி.எம். தேர்வை எழுதவிருக்கும் இந்திய மாணவர்களுக்காக இலவசக் கல்விப் பயிலரங்கு, ஸ்கூடாய் பல்நோக்கு மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடந்தேறியது.

ஸ்கூடாய் வட்டாரத்தில் இயங்கும் 25 இடைநிலைப்பள்ளிகளிலிருந்து 300 மாணவர்கள் பங்குகொண்ட இப்பயிலரங்கில் கணக்கு, மலாய், வரலாற்றுப் பாடங்களுக்குத் திறங்கொண்ட ஆசிரியர்களால் விளக்கமளிக்கப்பட்டது. இப்பயிலரங்கு காலை மணி 8.00க்குத் தொடங்கி மாலை மணி 5.00க்கு நிறைவடைந்தது.

தொகுதித் தலைவர் திரு. வெ. சங்கரபாண்டியன் தலைமையில் நடைபெற்ற இப்பயிலரங்கிற்கு ஜொகூர் மாநிலக் கல்வி இலாகா தமிழ்மொழி உதவி இயக்குநர் திரு. பிரகாசு சுந்தரம் சிறப்பு விருந்தினராகக் கலந்து மாணவர்களுக்கு உற்சாகமளித்தார்.

எய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தின் பொறுப்பாளர் திரு. விநோத் உயர்கல்வி வாய்ப்புகளை எடுத்துரைத்தார். அத்துடன், சிரம்பான் டேப் கல்லூரியில் வழங்கப்படும் திறன்கல்வி (திவேத்) குறித்து டத்தோ இபுறாகிம் விளக்கினார்.

ம.இ.கா. தேசிய உதவித் தலைவர் மதிப்புமிகு டத்தோ மு.அசோகன் இப்பயிலரங்கினை அதிகாரப்பூர்வமாக நிறைவு செய்து வைத்தார். இந்திய மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கி அரசு வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள வலியுறுத்தினார். மேலும், மாணவர்கள் எதிர்கால நல்வாழ்விற்காகத் திவேத் எனப்படும் திறன்கல்வியைப் பயில முன்னுரிமை வழங்கவேண்டும் எனவும் டத்தோ மு.அசோகன் கேட்டுக் கொண்டார்.

காலைச் சிற்றுண்டி, மதிய உணவு, மாலைத் தேநீர் என மூன்று வேளையும் உணவளித்ததுடன் தரமிக்கக் கல்விப் பயிலரங்கினை வெற்றிகரமாக நடத்தி மாணவர்நலம் போற்றிய ம.இ.கா. இஸ்கந்தார் புத்திரி தொகுதிக்குப் பெற்றோர்கள் புகழ்மாலை சூட்டினர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button