
மைபிபிபி கட்சியின் ஆதரவு யாருக்கு? செப்டம்பர் 1இல் முடிவு! டத்தோ லோகபாலா மோகன் திட்டவட்டம்
தேசம் செய்திகள் குணாளன் மணியம்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்
கோலாலம்பூர்,ஜூலை 28-
மைபிபிபி கட்சியின் ஆதரவு யாருக்கு என்பது செப்டம்பர் ஒன்றாம் தேதி திட்டவட்டமாக தெரிந்துவிடும் என்று அதன் தலைவர் டத்தோ லோகபாலா கூறியுள்ளார்.
நாங்கள் தலையாட்டி பொம்மைகள் அல்ல. முட்டாள்களும் அல்ல.
இத்தனை காலம் அனைவரையும் அரவணைத்து சென்றோம். ஆனால் இப்படியோ எங்களால் இருக்க முடியாது என்று டத்தோ லோகபாலா தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டில் மிகவும் பாரம்பரியமிக்க கட்சியாக மைபிபிபி கட்சி விளங்கி வந்துள்ளது. நாங்கள் காலங்காலமாக தேசிய முன்னணியை ஆதரித்து வருகிறோம்.
ஆனால், நாங்கள் தேசிய முன்னணியில் இருக்கிறோமா, இல்லையா என்பது குறித்து ஒரு தீர்க்கமான முடிவை தேசிய முன்னணி அறிவிக்கவில்லை.
ஆகையால் மைபிபிபி கட்சியின் தன்மானம் காக்க முடிவை எடுக்கும் தருணம் வந்துவிட்டது என்று டத்தோ லோகபாலா குறிப்பிட்டுள்ளார்.
மைபிபிபி கட்சியின் தேசிய பேராளர் மாநாடு
வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி உலக வாணிப மையத்தில் நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் 1,500 பேராளர்கள் எந்த கூட்டணிக்கு ஆதரவு தருவது தொடர்பில் வாக்களிப்பார்கள் என்று டத்தோ லோகபாலா சொன்னார்.
மைபிபிபி கட்சி உறுப்பினர்கள் முட்டாள்கள் இல்லை. நீங்கள் காட்டிய படத்திற்கு செப்டம்பர் 1இல் முடிவு கட்டப்படும் என்று டத்தோ லோகபாலா மோகன் குறிப்பிட்டுள்ளார்.



