Malaysia

மதுபான, சூதாட்ட நிறுவனங்கள் பள்ளிகளுக்கு நேரடி நிதியுதவி வழங்குவதை எதிர்க்கிறோம் அறவாரியம் மூலம் நன்கொடை வழங்குவதை ஆதரிக்கிறோம் ம.இ.கா இளைஞரணி தலைவர் அரவிந்த் கிருஷ்ணன் திட்டவட்டம்

தேசம் செய்திகள் குணாளன் மணியம்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்

கோலாலம்பூர் ஜூலை 28-
மது சிகரெட் மற்றும் சூதாட்ட நிறுவனங்கள் பள்ளிகளுக்கு நேரடியாக நிதியுதவி வழங்குவதை எதிர்ப்பதாக ம.இ.கா தேசிய இளைஞர் அணி தலைவர் அரவிந்த் கிருஷ்ணன் கூறியுள்ளார்.

எனினும் இந்நிறுவனங்கள் அறவாரியம் மூலம் நன்கொடை கொடுத்தால் ஏற்றுக் கொள்ளலாம்.
நேரடியாக நிதி கொடுப்பதற்கு பதிலாக அறவாரியம மூலம் நன்கொடை வழங்குவதை ம.இ.கா இளைஞர் அணி முற்றிலும் வரவேற்பதாக அரவிந்த் கிருஷ்ணன் தெரிவித்தார்.

சீனப் பள்ளிகளுக்கு சூதாட்ட நிறுவனங்கள் நேரடியாக நிதி கொடுத்து வருகிறது.
இதற்கு இப்போது எதிர்ப்புகள் கிளம்பி உள்ளது. அந்த வகையில் சூதாட்ட நிறுவனங்கள் அறவாரியம் மூலம் நன்கொடை வழங்கலாம் என்று
ம.இ.கா தேசிய இளைஞர் அணி உச்சமன்ற கூட்டத்திற்கு பிறகு ஊடகவியலாளரிடம் அர்வின் சொன்னார்.

இதனிடையே இணைய பகடிவதைக்கு முற்றுப் புள்ளி வைக்க கடுமையான தண்டனை வதிக்கப்பட வேண்டும் என்பதை ம.இ.கா இளைஞர் அணி வரவேற்கின்றது.
இணைய பகடிவதை குறித்து மேலவையில் குரல் கொடுக்கும்படி செனட்டர் டத்தோ நெல்சனிடம் ம.இ.கா தேசிய மகளிர் அணி மகஜர் வழங்கும் முடிவையும் இளைஞரணி வரவேற்பமாக அர்வின் கிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button