
பினாங்கு பாநில இந்திய முஸ்லிம் சங்கங்களின் ஒருங்கிணைப்பு சங்கத்தின் கபிம் ஏற்பாட்டிலான நோன்பு திறப்பு நிகழ்வில் 50 பேருக்கு ஈகைப் பெருநாள் அன்பளிப்பு
பினாங்கு,மார்ச் 13+ பினாங்கு
ஒவ்வொரு ஆண்டும் ஈகைப் பெருநாளை கொண்டாடுவதற்கு முன் முஸ்லிம்கள் நோன்பு இருப்பது கட்டாயம்.
அந்த வகையில் இந்த நாட்களில் மற்றவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவது மிகவும் சிறப்பாகும்.
அந்த வகையில் இந்திய முஸ்லிம் சங்கங்களின் ஒருங்கிணைப்பு சங்கமான கபிம் நேற்று நோன்பு துறப்பு நிகழ்வினை நடத்தி சிரமப்படும் 50 குடும்பங்களுக்கு உணவுக் கூடைகளை வழங்கினர்.
கபிம் சங்கத்தின் தலைவர் ஹாஜி ஹாமிட் சுல்தான் ஜபார் தலைமைத்துவத்தில் இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற, பினாங்கு ஆளுநர் துன் அமாட் புசி ஹாஜி அப்துல் ரசாக் சிறப்பு வருகை புரிந்தார்.
மேலும் பினாங்கு சக்காட் தரப்பினரும் உதவி பெற்ற மக்களுக்கு ஈகைப் பெருநாள் அன்பளிப்பு நிதியைவழங்கினர்.
அதனை கொம்தார் சட்டமன்ற உறுப்பினர் தே லாயா ஹேங் எடுத்து வழங்கினார்.
தொடர்ந்து இந்த நிகழ்வில் டாக்டர் அமினுள் ஹீசாயினி அப்துல் காதிர், டத்தோ சுலாய்மான ஹாஜா மைடின, ஹாஜி முனாவார் சாடிக் ஆகாயோருக்கு வாழ்நாள் சேவையாளர் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.
மேலும் இந்த நிகழ்வில் மதராசாக்களுக்கும் வட கூட்டரசு சிறுவர் புற்றுநோய் சங்கத்திற்கும் தலா 1000 வெள்ளி கொடுக்கப்பட்டது.
அதனுடன் பினாங்கு ஆளுநர் வாரியத்திலிருந்து கபிம் சங்கத்திற்கு 10 ஆயிரம் வெள்ளி வழங்கப்படட்டது.



