IndiaInternationalMalaysia

ம.இ.கா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணனுக்கு ‘அயலகத் தமிழ்க்காவலர்’ விருது வழங்கி கொளரவிப்பு

திருச்சி, அக்.6-
காந்தியடிகளின் 156 ஆவது பிறந்தநாள் விழாவில் மஇகாவின் தேசிய துணைத் தலைவரும், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ஸ்ரீ டாக்டர் எம். சரவணன் அவர்களுக்கு ‘அயலகத் தமிழ்க்காவலர்’ விருது வழங்கி கொளரவிக்கப்பட்டுள்ளது.

ஆத்தூர் “பாரதி மகாத்மா பண்பாட்டுப் பேரவையின்” ஏற்பாட்டில் ‘காந்தியடிகளின் 156 ஆவது பிறந்தநாள் விழா’ பைந்தமிழ் பெருவிழாவாக மிகச் சிறப்பாக ஆத்தூரில் கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்புப் பிரமுகராக டத்தோஸ்ரீ எம்.சரவணன் சிறப்புரையாறினார்.

இந்த விழாவில் கவிஞர் ஆத்தூர் சுந்தரம் அவர்கள் எழுதிய ‘கதவுகள் திறந்துவிடு’ எனும் மரபுக் கவிதை நூலையும் அவர் வெளியீடு செய்து வைத்தார் . நாடகம், பேச்சரங்கம், கவிநயம் என முத்தமிழின் சங்கமமாக தமிழின் சுவையோடு நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button