
பினாங்கு மாநில ம.இ.காவின் ஏற்பாட்டில் ஏம்ஸ்ட் பல்கலைக்கழக கல்வி சுற்றுலா
பினாங்கு மாநில ம.இ.காவின் ஏற்பாட்டில்
ஏம்ஸ்ட் பல்கலைக்கழக கல்வி சுற்றுலா
பினாங்கு மாநில தேசம் செய்தியாளர்
மு.வ.கலைமணி
பினாங்கு,மார்ச் 15-
ம.இ.காவின் தேசியத் தலைவர் தான் ஸ்ரீஙச. விக்னேஸ்வரன் அவர்களின் பேராதரவுடன் பினாங்கு மாநில ம.இ.காவின் ஏற்பாட்டில்,
ஏம்ஸ்ட் பல்கலைக்கழக கல்வி சுற்றுலா, எதிர்வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெறும் என பினாங்கு மாநில ம.இ.கா தலைவர் டத்தோ ஜெ.தினகரன் கூறினார்.

இச்சுற்றுலாவின் பிரதான நோக்கம் 4 மற்றும் 5 ஆம் படிவம் பயிலும் இந்திய மாணவர்களுக்கு, கல்வி தகுதிகள், பாடங்கள் மற்றும் வாய்ப்புகளை அறிமுகப்படுத்துவதாகும். இத்திட்டம், மஇகாவின் தேசியத் தலைவர் தான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரனின் ஒப்புதலுடன் முன்னெடுக்கப்படுவதாகவும், அவரின் செயற்பாடுகளின் கீழ் நடைபெறுவதாகவும், டத்தோ ஜெ. தினகரன் தெரிவித்தார்.

கல்வி மட்டுமே சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் முக்கிய கருவியாகும் என்ற அவர்,
இது மாணவர்களின் எதிர்காலம் மற்றும் சமூகத்தின் முன்னேற்றத்திற்கான முதல் படி என கூறினார்.
ஏம்ஸ்ட் பல்கலைக்கழகம், இந்திய சமூகத்துக்கான முன்னணி கல்வி மையமாக மாறி வருகிறது. இந்த சுற்றுலா, மாணவர்களுக்கு ஏம்ஸ்ட் பல்கலைக்கழகத்தின் தகுதிகள், பாடத்திட்டங்கள் மற்றும் திறன்களை விளக்குவதோடு, அவர்களின் எதிர்கால பயணத்தை மேம்படுத்தும் வழிகாட்டியாகவும் அமையும் என்றார் அவர்.

மஇகா, நமது மாணவர்களின் கல்விக்கு முக்கியத்துவம் வழங்குவதோடு, இந்த கல்வி சுற்றுலா அவர்களுக்கு ஒரு உத்வேகத்தை தரும் அதே வேளையில், மாணவர்களுக்கு உயர் கல்வி வாய்ப்புகளை அறிமுகப்படுத்தும் இந்த முயற்சி முக்கியமானதாக கருதப்படுவதாகவும் மாநில ம.இ.கா தலைவருமான டத்தோ ஜெ. தினகரன் சொன்னார்.
சுமார் 1000 மாணவர்களுக்கு அனைத்து வசதிகளும் குறிப்பாக பேருந்து சேவை, காலை, மதியம், மாலை, இரவு உணவு, மற்றும் மற்ற சேவைகளுக்காக சுமார் 80 ஆயிரம் ரிங்கிட் செலவில் ஏற்பாடு செய்துள்ளதாகவும், இந்த கல்வி சுற்றுலா, மாணவர்களுக்கு உயர்ந்த கல்வி வாய்ப்புகளை அறிமுகப்படுத்தும் ஒரு முக்கிய முயற்சியாக அமையும் என
பினாங்கு மாநில ம இ.கா துணைத் தலைவர் என்.கேசவன் தெரிவித்தார்.
சிறப்பான ஓரு ஏற்பாட்டினை செய்து இந்நிகழ்வினை வெற்றிப்பெற செய்ய மாநிலம், தொகுதி மற்றும் கிளைத் தலைவர்களின் ஒத்துழைப்பினை பெரிதும் எதிர்ப்பார்பதாக இணை ஏற்பாட்டாளரும் மாநில ம.இ.கா துணைத் தலைவருமான என்.கேசவன் தெரிவித்தார்.

இதனிடையே, இத்திட்டத்திற்கு பெற்றோர்கள், மாணவர்கள், பொது இயக்கங்கள் ஆதரவு கரங்கள் நீட்டுவதாக அவர் குறிப்பிட்டார்.



