
Malaysia
பொது தேர்தலில் இளம் வேட்பாளர்கள்? பழைய முகங்களும் இருப்பர்
தேசம் செய்திகள் சாரா
ஈப்போ, நவ.25-
நாட்டின் பொது தேர்தலில் இளம் வேட்பாளர்களை
களமிறக்க உத்தேசித்துள்ளதாக தேசிய முன்னணி தலைவர்
டத்தோ ஸ்ரீ அமாட் ஜாகிட் ஹாமீடி கோடி காட்டி பேசினார்.
அனுபவம், மக்களால் மதிக்கப்படும் இளம் வேட்பாளர்கள்
களமிறக்கப்பட பழைய முகங்கள் ஒதுக்கப்படுவதாக
பொருளாகாது என
இங்குள்ள கேசுரீனா மாநாட்டு மண்டபத்தில் பேராக் தேசிய முன்னணி மாநாட்டில் உரையாற்றுகையில் துணைப் பிரதமரான அவர் சுட்டிக்காட்டி பேசுகையில் மண்டபத்தில் கரவொலி பலமாய் இருந்தது.
பழைய முகங்களுடன்
இளம் முகங்கள் ஒன்றிணைந்து தேர்தலில் களம்
காண நல்ல தருணம் என்றார்.



