
இந்திய கூட்டுறவுக் கழகங்களுக்கான உதவி நிதிக்கு முறையாக விண்ணப்பியுங்கள் டத்தோ அன்புமணி பாலன் வேண்டுகோள்
ஷாஆலம்,நவ.25-
இந்திய கூட்டுறவுக் கழகங்களுக்கான உதவி நிதிக்கு முறையாக விண்ணப்பிக்க வேண்டும் என்று
தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோஶ்ரீ ரமணின் முதன்மை அரசியல் செயலாளர் டத்தோ அன்புமணி பாலன் கேட்டுக் கொண்டுள்ளார்.
மலேசிய வரலாற்றில் இந்திய கூட்டுறவுக் கழகங்களுக்கான மாநாடு முதல் முறையாக கோலாலம்பூரில் நடைபெற்ற நிலையில் இதில்
கலந்து கொண்ட கூட்டுறவு கழகங்களுக்கு 30 ஆயிரம் உதவி நிதி வழங்க துணையமைச்சர் டத்தோஶ்ரீ ரமணன் உறுதியளித்திருந்ததாக மிட்லண்ட்ஸ் கூட்டுறவு கழகத்தின் 73ஆவது ஆண்டுக் கூட்டத்தை தொடக்கி வைத்த டத்தோ அன்புமணி இதனை தெரிவித்தார்.
இந்திய கூட்டுறவு கழகங்கள் உதவிநிதிக்கு முறையாக விண்ணப்பித்து வரும் நிலையில் கூட்டுறவு கழகங்கள் விண்ணப்பம் செய்வதில் சில சிக்கல்களை எதிர்நோக்கி வருகின்றனர். இதற்கு தீர்வு காண கூட்டுறவு கழகங்கள் அருகில் உள்ள கூட்டுறவு ஆணையங்களுடன் தொடர்பு கொள்ளலாம் என்றார் டத்தோ அன்புமணி பாலன்.

இதில் ஆவணங்கள் முறையாக இருந்தால் சிக்கல் இல்லை. நாட்டில் உள்ள அனைத்து இந்திய கூட்டுறவு கழகங்களும் ஒன்றுப்பட்டு செயல்பட வேண்டும். அரசாங்கத்தின் திட்டங்களை இக்கழகங்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று டத்தோ அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
இந்த நிகழ்வில் மிட்லண்ட்ஸ் கூட்டுறவு கழகத்தின் தலைவர் ஏஎன் வேலு உட்பட அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.



