International

என்னை தண்டியுங்கள்! அப்பாவி மக்களை விட்டு விடுங்கள்! நடிகர் விஜய் உருக்கமான வேண்டுகோள்.

சென்னை, அக்.1- கரூர் சம்பவம் தொடர்பில் உருக்கமான வேண்டுகோள் விடுத்த நடிகர் விஜய், முதலமைச்சர் அவர்களே, என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். அப்பாவி மக்களையும் தோழர்களையும் விட்டு விடுங்கள் என்று கூறினார். என் வாழ்க்கையில் இது போன்ற சூழ்நிலையை சந்தித்ததில்லை. என் மனசு முழுக்க வலி. வலி மட்டும்தான் உள்ளது என்று கரூர் சம்பவம் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்ட தவெக தலைவர் விஜய் அவ்வாறு கூறினார். தமிழக வெற்றிக் கழகம் மாநாடு ஏற்கெனவே 5 மாவட்டங்களில் நடைபெற்று பிரச்சாரம் செய்தோம். அங்கெல்லாம் நடக்காமல் அசம்பாவிதம் நடக்காமல் கரூரில் மட்டும் ஏன் நடக்கிறது? மக்களுக்கு தெரியும் என்றார் விஜய். கரூர் மக்கள் நடந்த உண்மைகளை சொல்லும் போது கடவுளே வந்து சொல்வது போல் இருந்தது.சீக்கிரமே எல்லா உண்மைகளும் வெளியே வரும். அப்போது எல்லாம் தெரியும் என்று விஜய் தெரிவித்தார். முதலமைச்சர் அவர்களே உங்களுக்பகு கோபம் இருந்தாலோ பழி வாங்கும் எண்ணம் இருந்தாலோ என் மீது கை வையுங்கள். நான் வீட்டில் அல்லது அலுவலகத்தில் தான் இருப்பேன். ஆனால் அப்பாவி மக்கள், தோழர்கள் மீது கை வைக்காதீர்கள் என்று விஜய் உருக்கமான வேண்டுகோள் வைத்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button