MalaysiaInternational

இறுக்கமான கால அட்டவணையிலும் கொப்பகபானா கடற்கரையில் உடற்பயிற்சி செய்த பிரதமர் அன்வார் உடல்நலத்தில் அக்கறை!

இறுக்கமான கால அட்டவணையிலும் கொப்பகபானா கடற்கரையில் உடற்பயிற்சி செய்த பிரதமர் அன்வார் உடல்நலத்தில் அக்கறை

ரியோ டி ஜெனிரோ, ஜூலை 6 – பிரேசில் விஜயத்தின் பரபரப்பான அதிகாரப்பூர்வ நிகழ்ச்சி நிரலுக்கு மத்தியிலும், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது உடல்நலத்தைப் பராமரிப்பதில் உறுதியாக இருந்தார்.

பிரதமர் அன்வார் ரியோ டி ஜெனிரோவின் புகழ்பெற்ற கொப்பகபானா கடற்கரையில் (Copacabana Beach) உடற்பயிற்சி செய்வதைக் காண முடிந்தது.

காலை 7:30 மணியளவில் (உள்ளூர் நேரம்) பிரதமர் அங்குச் சென்று, சுமார் அரை மணி நேரம் கடற்கரையில் வேகமாக நடந்து உடற்பயிற்சி செய்தார். அவர் சாதாரணமாக வெள்ளை நிற போலோ சட்டை மற்றும் கருப்பு பயிற்சிப் பான்ட் அணிந்திருந்தார். அன்வார் அங்கு இருந்த சுற்றுலாப் பயணிகளையும் உள்ளூர் மக்களையும் சந்தித்து வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டார். சிலர் அவருடன் செல்ஃபி எடுக்கவும் கேட்டுக் கொண்டனர்.

பிரதமருடன் அவரது அரசியல் செயலாளர் ஃபர்ஹான் ஃபவ்சி மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரிகள் குழுவும் உடன் இருந்தனர்.

 

BRICS உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இத்தாலி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்த பின்னர், பிரதமர் அன்வார் ரியோ டி ஜெனிரோ வந்து சேர்ந்தார். இன்று, அவர் BRICS உச்சி மாநாட்டில் பங்கேற்கவுள்ளார்.

மடானி அரசாங்கத்தின் தலைவரான பிரதமர் அன்வார், கடுமையான வேலைப் பளுவுக்கு மத்தியிலும், தனது உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதன் முக்கியத்துவத்தை இந்த நிகழ்வு எடுத்துக்காட்டுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button