IndiaInternational

அகமதாபாத் விமான விபத்து நடந்தது எப்படி? இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பரிதாப மரணம்!

அகமதாபாத் விமான விபத்து நடந்தது எப்படி? இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பரிதாப மரணம்

 

அகமதாபாத், ஜூன் 12-

லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், ஒரு மருத்துவர்கள் விடுதியில் மோதியதாக அமதாபாத்தில் உள்ள ஒரு மூத்த காவல்துறை அதிகாரி ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

காவல்துறை, தீயணைப்பு வீரர்கள் மற்றும் பிற மீட்புப் படையினர், விபத்து நடந்த சில நிமிடங்களில் சம்பவ இடத்தை அடைந்ததாக அவர் தெரிவித்தார் மீட்புப் பணிகள் இன்று நடந்து வருவதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.

குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டன் செல்லப் புறப்பட்ட ஏர் இந்தியா பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த துயர சம்பவத்தில் இதுவரை 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அகமதாபாத்தில் இருந்து லண்டனின் கேட்விக் விமான நிலையத்திற்கு செல்ல வேண்டிய ஏர்இந்தியா AI 171 விமானம், புறப்பட்ட 5 நிமிடங்களுக்குப் பிறகு மதியம் 1:38 மணிக்கு குடியிருப்புப் பகுதியில் (மேகானி நகர்) மோதி விபத்துக்குள்ளானது.

விமானத்தில் 232 பயணிகள் இருந்தனர். அதில் பெரியவர்கள் 230 பேர், விமானப் பணியாளர்கள் 10 பேர், விமானிகள் இருவர் என மொத்தம் 242 பேர் இருந்தனர்” என சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே அகமதாபாத் விமான விபத்து வார்த்தைகளால் கூற முடியாத அளவுக்கு கடும் துயரம் ஏற்படுகிறது என்று பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

அகமதாபாத்தில் நிகழ்ந்த விமான விபத்து கடும் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. இந்த விமான விபத்து வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத அளவுக்கு கடும் துயரம் அளிப்பதாகவும், மீட்பு, நிவாரணப் பணிகளை மேற்கொள்ளும் அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என பிரதமர் மோடி தமது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button