Malaysia

ஊடக நிறுவனங்களுக்கு உதவும் வகையில் 3 கோடி வெள்ளி ஒதுக்கீடு  பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் அறிவிப்பு

கோலாலம்பூர் ஜூன் 14-

நாட்டில் உள்ள ஊடக நிறுவனங்களுக்கு உதவும் வகையில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மூன்று கோடி வெள்ளி ஒதுக்கீட்டை அறிவித்துள்ளார்.

நாட்டில் உள்ள ஊடக நிறுவனங்கள் டிஜிட்டல் எனப்படும் செயற்கை நுண்ணறிவு உருமாற்றத்தை செயல்படுத்துவது மற்றும் உற்பத்தியில் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதிலும் உதவுவதற்காக இந்த மூன்று கோடி வெள்ளி ஒதுக்கப்படுகிறது என்று டத்தோஸ்ரீ அன்வார் தெரிவித்தார்.

செய்தியாளர்களின் ஆற்றலும் தயாரிப்பும் சிறப்பாக இருப்பதை உறுதி செய்ததற்கு நான் பொறுப்பு. உங்கள் செய்திகள் சிறப்பாக இருப்பதால் நான் உங்களை வலுவாக ஆதரிக்கிறேன். இது தொடர்பில் தகவல் தொடர்பு துறை அமைச்சுடன் பேசினேன். அந்த வகையில் ஊடக நிறுவனங்களுக்கு உதவ இந்த பெரிய நிதியை ஒதுக்க முன் வந்ததாக அன்வார் சொன்னார்.

உலக வாணிப மையத்தில் 2025ஆம் ஆண்டுக்கானசெய்தியாளர்கள் விழா சனிக்கிழமை மிகவும் விமர்சையாக நடைபெற்றது. மலேசிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்நிகழ்வுக்கு தலைமை வகித்தார்.

தகவல், தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹமி பட்சில் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர். பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தமது உரையில் பத்திரிகையாளர்களுக்கு ஒதுக்கிய நிதியில் இதுவே அதிகமானது என்பதை சுட்டிக் காட்டினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button