காரைக்குடி தொகுதியில் எந்த கட்சிக் வெற்றி பெறும்?
தேசம் செய்திகள் தமிழ்நாட்டில் இருந்து எம்.முருகன்
காரைக்குடி , ஜன.4 – காரைக்குடி தொகுதி பரவலாக பேசப்படும் தொகுதியாக இருந்து வருகிறது. இதற்கு காரணம் நகரத்தார்கள், தேவர்கள், வெள்ளாளர்கள் என்று ஜாதி அடிப்படையில் இங்கு அதிகமானவரகள் இருந்து சிறப்பான முறையில் தொழிலும் செய்து வருகிறார்கள். அந்த வகையில் ஆரம்ப காலத்தில் திராவிட முன்னேற்ற கழகம் இந்த தொகுதியில் முன்னிலை வைத்து வந்தது. பிறகு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வந்தது. அதன் பிறகு பல கட்சிகள் இந்த தொகுதியை குறி வைத்துள்ளது. அந்த வகையில் இந்த 2026 சட்டமன்ற தேர்தலுக்கு காரைக்குடி தொகுதி யாருக்கு
என்பதில் விடை கிடைக்காமல் இலுக்கிறது.
எடப்பாடி கூட்டணி, தாமரை பிஜேபி இந்த தொகுதியில் போட்டியிட ஆர்வம். அதுபோல தமிழ் மாநில காங்கிரஸ் ஏற்கனவே இரண்டு முறை இருந்துள்ளது. இந்த முறையும் இந்த தொகுதியை கூட்டணியோடு இருக்கலாம் என்று ஒரு முன்னோட்டம் ஏற்பட்டுள்ளது. அதுபோல நாம் தமிழர் கட்சி சீமானும் இந்த தொகுதியை விடாமல் இருக்க ஆலோசித்து வருகிறார்.
கடைசியாக விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி இந்த தொகுதியில் போட்டியிட ஆர்வம் காட்டி வருகிறது. ஆனால் இவர்களுக்கு இன்னும் சின்னம் வழங்கப்படவில்லை இருந்தாலும். அது ஒரு முடிவுக்கு வந்து இந்த தொகுதிக்கு போட்டியிடலாம் என்று கருதப்படுகிறது. அந்தந்த கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் இப்பொழுது கீழே இறங்கி அனைவரும் ஒரு சேர வேலை செய்து வருகிறார்கள். அடிக்கடி முக்கிய தலைவர்கள் சீமான், வாசன், எடப்பாடி ஐயா தவெக கட்சியை சேர்ந்த பிரபு, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கார்த்திக், சிதம்பரம் போன்ற தலைவர்களும் காரைக்குடி தொகுதியை குறிவைத்து வேலை செய்து வருகிறார்கள். இந்த காரைக்குடி தொகுதி யாருக்கு கிடைக்கும் என்பது புரியாத ஒரு புதிராகவே உள்ளது.
பிஜேபி முதலாவது இடத்தில் உள்ளது. யாருக்கு கிடைத்தாலும் இந்த தொகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறும் போது தங்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றும் பல பிரச்சினைகள் இந்த காரைக்குடி தொகுதியில் இருப்பதாக கூறுகின்றனர்.
இங்குள்ள சாலை பிரச்சனை, தண்ணீர் பிரச்சனை,போக்குவரத்து பிரச்சனை, மின்சார பிரச்சனை, சுகாதார பிரச்சனை என்று பல வகையான பிரச்சனைகளை எதிர்நோக்கி வருவதாக மக்கள் தெரிவித்தனர்.
எல்லா தலைவர்களும் சொல்லிவிட்டு செல்கிறார்கள். தேர்தல் வரும் போது வருகிறார்கள். பிறகு போகிறார்கள். அதற்குப் பிறகு எந்தவித உதவியும் செய்வதில்லை. காரைக்குடி ஒரு நல்ல தொகுதி. இந்தத் தொகுதியை தக்க வைத்துக் கொள்ள நல்ல ஒரு கட்சியையும் நல்ல ஒரு தலைவரையும் தேடுதாக தொகுதி மக்கள் திட்டவட்டமாக கூறுகின்றனர்.



