
India
சல்மான் கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல்
மும்பை, ஏப்.14-
பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொலை மிரட்டலில் சதிகாரர்கள் சல்மான்கானை அவரது இல்லத்தில் வைத்து கொலை செய்து விடுவோம் என்றும் வாகனத்தை வெடிகுண்டு வைத்து தகர்த்து விடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர்.
இந்த மிரட்டல் தொடர்பில் மும்பை காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



