
India
பதவிக்காக யார் வீட்டு வாசலிலும் நின்றது கிடையாது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்
சென்னை,ஏப்.14-
பாஜக கூட்டணி அமைந்தால் கட்சியிலிருந்து விலகுவதாக நான் சொன்னதாக கூறப்படுவது திட்டமிட்ட ஒரு பொய் செய்தி என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
அதிமுக பாஜகவின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது, என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விமர்சனம் செய்திருப்பது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்ட போது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவ்வாறு தெரிவித்தார்.
நான் எந்த நேரத்திலும் அவ்வாறு சொல்லவே இல்லை. இது திட்டமிட்ட ஒரு பொய் செய்தி. இதை திட்டமிட்டு பரப்பி, நான் ஏதோ கட்சியில் இருந்து விலகுவதாகவும் கூறியது போல சொல்லப்படுகிறது என்று ஜெயக்குமார் சொன்னார்.



