MalaysiaIndiaInternational

மலேசியாவுக்கு வேலை தேடி காணாமல் போய் உயிரிழந்த கமலநாதன் பிரேதம் திருச்சி அனுப்பி வகைக்கப்பட்டது உலக மலேசிய மனிதநேய அமைப்பின் தலைவர் டாக்டர் த.கமலநாதன் தகவல்

 

கோலாலம்பூர், ஜூன் 23-
மலேசியாவுக்கு வேலைக்கு வந்து காணாமல் போய் பிறகு உயிரிழந்த தமிழ்நாட்டு இளைஞரின் பிரேதத்தை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்ததாக உலக மலேசிய மனிதநேய அமைப்பின் தலைவர் டாக்டர் கமலநாதன் கூறினார்.

தமிழ்நாடு, திருச்சி வட்டாரத்தை சேர்ந்த சிலம்பரசன் என்ற ஆடவர் கடந்த மார்ச் மாதம் வேலை தேடி மலேசியாவுக்கு வந்தார். சில மாதங்கள் காணாமல் போனார். தமிழ்நாட்டில் உள்ள தமது குடும்பத்தின் தொடர்பை இழந்தார். இந்நிலையில் உடல்நலம் குன்றி மாரடைப்பால் காலமானார்.

இந்த ஆடவர் கிள்ளானில் உள்ள ஒரு இரும்பு கடையில் வேலை செய்தார். அதன்பிறகு அங்கிருந்து வெளியேறி செந்தோசாவுக்கு வந்தார். பிறகு அவரை பற்றிய தகவல்கள் தெரியவில்லை.

இந்நிலையில் இந்த விவகாரம் டாக்டர் கமலநாதன் பார்வைக்கு கொண்டு வரப்பட்டது. இது தொடர்பில் கமலநாதன் சிலம்பரசன் வேலை செய்த இடத்திற்கு சென்று விசாரித்தார். அப்போது சிலம்பரசன் கிள்ளான் மருத்துவமனைக்கு சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அங்கு சென்று விசாரித்த போது மே 9ஆம் தேதி நெஞ்சுவலி காரணமாக அவர் காலமானது தெரியவந்த்தாக கமலநாதன் தெரிவித்தார்.

சிலம்பரசன் அப்போது அடையாளம் தெரியாத சடலமாக மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்ததால் யாருக்கும் தகவல் தெரியவில்லை. இந்நிலையில் சிலம்பரசன் கையில் பச்சை குத்தியிருந்த்தை பார்த்து தங்கள் மகன்தான் என்பதை குடும்பத்தினர் உறுதிபடுத்தியதாக கமலநாதன் சொன்னார்.

சிலம்பரசன் பிரேதம் நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைக்கோ மற்றும் வால்குடி சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டி உதவியுடன் திருச்சி அனுப்பி வைக்கப்பட்டதாக கமலநாதன் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button