
Malaysia
சீனா அதிபர் ஜி ஜின்பிங் மலேசிய வருகை KLIA இரண்டாவது முனையத்திற்குச் செல்லும் சாலைகள் தற்காலிகமாக மூடப்படுகிறது
கோலாலம்பூர், ஏப்.14-
சீனா அதிபர் ஜி ஜின்பிங்கின் மலேசிய வருகையை முன்னிட்டு KLIA இரண்டாவது முனையத்திற்குச் செல்லும் சாலைகள் ஏப்ரல் 15 முதல் அங்கு செல்லும் அனைத்து தற்காலிகமாக மூடப்படுகிறது என்று மலேசிய ஏர்போர்ட்ஸ் ஹொல்டிங்ஸ் பெர்ஹாட் முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
இந்த இரண்டாவது முனையத்தில் விமானம் புறப்படுவதற்கும் தரையிறங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் வாகனங்கள் நிறுத்துவதற்கும் தற்காலிக தடை விதிக்கப்படுவதாக அது அறிவித்துள்ளது.
கே.எல்.ஐ.ஏ 2இல் இறங்கும் பயணிகள் அனைவரும் கே.எல்.ஐ.ஏ 1க்கு செல்ல கேட்டுக் கொள்ளப்படுறார்கள். சீனா நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் ஏப்ரல் 15 முதல் ஏப்ரல் 17 வரை மலேசியாவிற்கு அதிகாரப்பூர்வ வருகை மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது



