
Malaysia
ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தின் வேந்தர் தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தலைமையில் ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழக எம்ஐஇடி நிர்வாகக் கூட்டம்
சுங்கை பட்டாணி,ஏப்.14-
மலேசிய இந்தியர் காங்கிரஸ்-மஇகாவின் கல்விக் கரமான எம்ஐஇடி(Maju Institute of Educational Development-MIED) அறங்காவலர் குழுவின் நிர்வாகக் கூட்டம் ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழக வளாகத்தில் அதன் வேந்தர் தான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

இந்த இரண்டாவது கல்வி ஆண்டிற்கான இரண்டாவது கூட்டத்தில் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சி, மாணவர் நலம், மாணவர் எண்ணிக்கை அதிகரிப்பு குறித்தெல்லாம் ஆலோசிக்கப்பட்டது.
இதில் குறிப்பாக, மலேசிய இந்திய மாணவர்களின் கல்வி மேம்பாட்டில் எம்ஐஇடி கொண்டுள்ள கடப்பாடு குறித்து அதிகமாக ஆலோசிக்கப்பட்டதாக முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தது.



