
InternationalMalaysia
திமோர் லெஸ்தே பிரதமர் கண்ணீர் மல்க ஆற்றிய உரை உலகத் தலைவர்களின் கவனத்தை ஈர்த்தது
கோலாலம்பூர், அக்.26 – ஆசியானில் திமோர் லெஸ்தே இணைந்ததன் மூலம் ஒரு கனவு நனவாகி உள்ளதால் மக்களின் பயணம் உறுதியாக தொடரும் என்று திமோர் லெஸ்தே பிரதமர் கேய் ராலா சனானா குஸ்மாவோ தமது உரையில் உருக்கமாக கூறினார். இந்த சாதனை, பகிரப்பட்ட மதிப்புகள், அபிலாஷைகள், கூட்டாக கட்டமைக்கப்பட்ட எதிர்காலத்தால் பிணைக்கப்பட்ட உண்மையிலேயே ஒன்றுபட்ட நாடுகளின் குடும்பமாக ஆசியானின் பார்வையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. திமோர்-லெஸ்தே ஆசியானின் 11ஆவது உறுப்பு நாடாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதானது எங்கள் நாட்டின் மேம்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளது என்று அவர் உருக்கமாக தெரிவித்தார். கோலாலம்பூரில் நடைபெற்ற 47ஆவது ஆசியான் உச்ச நிலை மாநாட்டில் திமோர் லெஸ்தே ஆசியானில் இணைவதற்கான பிரகடனத்தில் அவர் கையெழுத்திட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.



