
ஊடகங்கள் சமூக அணிதிரட்டலுக்கான தளங்களாக மாறியுள்ளன யு.யு.எம். கருத்தரங்கில் தகவல், தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்ஸில் சிறப்புரை
அலோர் ஸ்டார், ஜூன் 11-
ஊடகங்கள் வெறும் செய்தி வழங்குநர்கள் மட்டுமல்ல, விவாதம், உண்மைச் சரிபார்ப்பு மற்றும் சமூக அணிதிரட்டலுக்கான தளங்களாகவும் மாறியுள்ளன எனத் தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்ஸில் கூறினார்.
Universiti Utara Malaysia (UUM) ஏற்பாடு செய்திருந்த “சைபர், குரல் மற்றும் எல்லைகள்: டிஜிட்டல் சகாப்தத்தில் ஊடக சுதந்திரத்தின் இயக்கவியலைக் கண்டறிதல்” என்ற தலைப்பிலான கருத்தரங்கில் சிறப்புரையாற்றும்போதே டத்தோ ஃபஹ்மி ஃபட்ஸில் இவ்வாறு குறிப்பிட்டார்.
போலித் தகவல்களின் பரவல் ஒரு சவால்
இந்தக் கருத்தரங்கம், UUM இன் சட்டப் பள்ளியும் மலேசியப் பத்திரிகை நிறுவனமும் (MPI) இணைந்து ஏற்பாடு செய்ததாகும். தனது உரையில், டிஜிட்டல் யுகம் போலித் தகவல்கள், வெறுப்புப் பேச்சு மற்றும் அல்காரிதம் முறைகேடு போன்ற சவால்களையும் கொண்டு வருவதாக ஃபஹ்மி சுட்டிக்காட்டினார்.
செயற்கை நுண்ணறிவின் (AI) வருகையால் ஊடகங்களின் பொறுப்பு மேலும் அதிகரித்துள்ளதாக அவர் கூறினார்.
“ஆகவே, ஊடகவியலாளர்கள் வெளிப்படைத்தன்மை, நெறிமுறைகள் மற்றும் உண்மையைப் பாதுகாப்பதை உறுதி செய்ய வேண்டும்,” என டத்தோ ஃபஹ்மி ஃபட்ஸில் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.



