
ஷா ஆலம், Taman Segar Tambahan ஸ்ரீ சிவசக்தி மாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம்
ஷா ஆலம், ஏப்.5-
ஒரு ஆலயத்திற்கு திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடத்துவது எளிதான காரியமல்ல என்றாலும் அந்த திருப்பணியை திறம்பட செய்து முடித்திருக்கிறார்கள் ஷா ஆலம் ஸ்ரீ சிவசக்தி மாரியம்மன் ஆலய
ஆலய நிர்வாகத்தினர்.
அந்த வகையில் ஷா ஆலம், Taman Segar Tambahan ஸ்ரீ சிவசக்தி மாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம் ஏப்ரல் 13 ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி தொடங்கி 8.20 மணிக்குள் மிகவும் சிறப்பாக நடைபெறவிருப்பதாக ஆலய தலைவர் திரு.கோபால் ஆறுமுகம் கூறினார்.
இந்த மஹா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஏப்ரல் 10ஆம் தேதி காலை 8 மணி தொடங்கி பூர்வாங்க பூஜைகள், முகூர்த்தக்கால் மற்றும் கொடிமரம் ஸ்தாபனம் போன்றவைகள் நடைபெறும். தொடர்ந்து ஏப்ரல் 11, 12 ஆகிய இரண்டு நாட்கள் தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெறும் நிலையில் ஏப்ரல் 13ஆம் தேதி மஹா கும்பாபிஷேக நாளில் காலை 5 மணி தொடங்கி சிறப்பு பூஜைகள் நடைபெறும். தொடர்ந்து காலை 8.15 மணிக்கு சுந்தர விமானம் மற்றும் பரிவார விமானங்களுக்கு திருகும்பாபிஷேகம் நடைபெறவுள்ளதாக கோபால் தெரிவித்தார்.
இந்த மஹா கும்பாபிஷேகத்திற்கு பிறகு விஷேச பூஜை, விபூதி பிரசாதம், அர்ச்சனை நடைபெறும். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படவிருப்பதாக கோபால் சொன்னார்.

இந்த ஷா ஆலம், Taman Segar Tambahan ஸ்ரீ சிவசக்தி மாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேக விழாவில் ம.இ.கா தேசிய துணைத்தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன், தொழில் முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டு துணையமைச்சர் டத்தோஸ்ரீ ஆர்.ரமணன், சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் YB பாப்பாராயுடு, பத்து நாடாளுமன்ற உறுப்பினர் YB பி.பிரபாகரன், கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ.கணபதிராவ், கோத்த டாமான்சாரா சட்டமன்ற உறுப்பினர் YB இஸ்வான் காசிம் உள்ளிட்ட பலரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ளவிருப்பதால் பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ளும்படி ஆலய செயலாளர் திரு.அருண்குமார் அழைப்பு விடுத்துள்ளார். தொடர்புக்கு
திரு.Gopal -0163546203
திரு.Arun -0163242649



