Malaysia

சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர் வெற்றி வசந்த்துக்கு தேசம் ஊடகத்தின் சிறந்த, பிரபல சீரியல் நடிகர் விருது வழங்கி கௌரவிப்பு

கிள்ளான்,ஏப்.5-
தேசம் ஊடகம் ஆண்டுதோறும் நடத்தி வரும் தேசம் அனைத்துலக சாதனையாளர்கள் விருது விழாவை முன்னிட்டு விஜய் தொலைக்காட்சியின் சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் நடிகர் வெற்றி வசந்த்துக்கு சிறந்த மற்றும் புகழ்ப்பெற்ற சீரியல் கதாநாயகன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

கிள்ளான் KLC ESPLANADE MALL பேரங்காடியில் நடைபெற்று வரும் Global Indian Shopping Expo 2025 விற்பனை சந்தைக்கு சிறப்பு வருகை மேற்கொண்ட வெற்றி வசந்த் அவர்களுக்கு தேசம் ஊடகத்தின் தோற்றுநரும் தலைமையாசிரியருமான குணாளன் மணியம் மக்கள் முன்னிலையில் பொன்னாடை அணிவித்து தேசம் விருது, நற்சான்றிதழ் வழங்கி கௌரவித்துள்ளார்.

இந்த விருது கௌரவிப்பை பெற்றுக் கொண்ட வெற்றி வசந்த் தேசம் ஊடகத்திற்கும் குணாளன் மணியம் அவர்களுக்கும் Color of Indiaவின் உரிமையாளர் சத்தியகுமரன் அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

இந்த விருது வழங்கும் நிகழ்வில் தேசம் ஊடகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சரஸ்வதி பெருமாள், தேசம் ஆலோசகர் அஜய் @ ஜெயரத்தினம், இயக்குநர் குமாரி ரேவதி குணாளன், தேசம் இணை இயக்குநர் ஹரி ஸ்ரீநிவாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வெற்றி வசந்த் விற்பனை சந்தையில் ரசிகர்களை சந்தித்ததுடன் அவர்களுடம் படம் பிடித்துக் கொண்டதோடு விற்பனை சந்தை கடைகளை வலம் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button