
Malaysia
மகாவிஷ்ணுவின் பரம்பொருள் யாகம், சொற்பொழிவு
ஈப்போ, ஏப்.4- மகாவிஷ்ணுவின் பரம்பொருள் யாகம் நிகழ்வு ” திரவல் லோன்ச்” தங்கும் விடுதியில் ஏப்ரல் 6 ஞாயிற்றுக்கிழமை காலை மணி 8.00 க்கு நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டுக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
தமிழகத்தில் பரம்பொருள் அறக்கட்டளையை நிறுவி பல ஆன்மீக மற்றும் சமூகப்பணிகளை ஆற்றி வரும் குருஜி மகாவிஷ்ணு, உலகின் பல நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு ஆன்மீகப் பயிற்சி அளிப்பதோடு ஆன்மீக உரைகளும் ஆற்றி வரும் நிலையில் அவரின் தலைமையில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் கலந்து கொள்ள விரும்பும் பொதுமக்கள் 011-26811028 என்ற கைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ள அழைக்கப்படுகின்றனர்.



