Malaysia

டான்ஸ்ரீ ராஜூ சுழல் கிண்ண கால் பந்துப்போட்டி கே. எஸ். ஆர். தாசேக் ‘ பி.’ குழு வாகை சூடியது

ஈப்போ,ஏப்.21-
மறைந்த பேரா மாநில ம..இ.கா. முன்னாள். தலைவர் டான்ஸ்ரீ கோ. ராஜூவின் சுழல் கிண்ண கால பந்துப்போட்டியில் கே. எஸ். ஆர். தாசேக் ‘ பி.’ குழு வாகை சூடியது.

ஈப்போ பாராட் தொகுதி காங்கிரஸ் ஏற்பாட்டில் ஈப்போ பிரைடேஸ் கிளப் ஆதரவுடன் முதல முறையாக நடத்தப்படும் இப்போட்டியில் 16 குழுக்கள் கலந்துக்கொண்டன.

முதல் நிலையில் வெற்றிப் பெற்ற கே. எஸ். ஆர். தாசேக் ‘ பி.’ கால் பந்துக் குழு 3 ஆயிரம் ரிங்கிட் பரிசு தொகையை வென்ற வேளையில் கே. எஸ். ஆர். தாசேக்
‘ ஏ. குழு இரண்டாம் நிலையில் வெற்றிப் பெற்று . 2 ஆயிரம் ரிங்கிட் பரிசு தொகையை வென்றது.

மூன்றாவது நான்காவது இடங்களை சூரியா கால் பந்துக் குழு மற்றும் வசந்தன் பிரதர்ஸ் குழு வாகை சூடி தலா 750 ரிங்கிட் பரிசு தொகையை வென்றது.

இப்போட்டியை மாநில ம.இ.கா. தலைவர் டான்ஸ்ரீ இராமசாமி தொடக்கி்வைத்துடன் இந்த நிகழ்வுக்கு 5 ஆயிரம் ரிங்கிட் நிதி உதவியையும் வழங்கினார்.

இந்த நிகழ்வில் வெற்றிப் பெற்றவர்களுக்கு ம.இ.கா. தேசிய உதவித் தலைவர் டத்தோ அசோஜன் பரிசுகளை எடுத்து வழங்கினார்

இந்திய இளைஞர்கள் விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்க ம..இ. கா. தொடர்ந்து ஆதரவு வரங்கி வருவதாக டான்ஸ்ரீ இராமசாமி மற்றும் டத்தோ அசோஜனும் தங்களது உரையில் குறிப்பிட்டனர்.

மறைந்த பேரா மாநில ம இ.கா. தலைவர் டான்ஸ்ரீ ஜி. ராஜூ பேரா மாநிலத்தில் இந்திய சமுதாயத்திற்கு சிறந்த சேவை வழங்கியுள்ளார..

அவரின் பெயரில் கால்பந்து நடத்துவதை அவர்கள் வரவேற்றதுடன் இப்போட்டியை ஆண்டு தோறும் நடத்தவேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்

ஈப்போ பாடாங்கில் நடைபெற்ற இப்போட்டியில் சிறப்புடன் நடைபெற டான்ஸ்ரீ ராஜூவின் புதல்வர் ஆர். சுந்தரம் மற்றும் அவரது குடும்பத்தினர் ஆதரவு வழங்கியதற்கு நன்றியைக் கூறிக்கொண்டார்.

இப்பபோட்டி ஆண்டு தோறும் நடத்ததப்பட உள்ளதாகவும் குறிப்பிட்ட ஜெயகோபி இந்த நிகழ்வு தொடர்ந்து சிறப்புடன் நடைபெற ஆதரவு தேவை என்று வலியுறுத்தினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button