Malaysia

Kuil Haram என்ற சொல்லை பயன்படுத்தாதீர்கள் அரசு துறைகள், நிறுவனங்கள் கவனத்தில் கொள்ள உத்தரவிடுங்கள் டத்தோஸ்ரீ எம்.சரவணன் பிரதமர் அன்வாருக்கு கடிதம்

கோலாலம்பூர், ஏப்.21-
நாடு தழுவிய நிலையில் இருக்கும்
அரசாங்க துறைகள் மற்றும் நிறுவனங்கள் Kuil Haram என்ற சொல்லை பயன்படுத்தக் கூடாது என்பதை வலியுறுத்திய ம.இ.கா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஶ்ரீ எம். சரவணன் கடிதம் வாயிலாக பிரதமருக்கு இதனை வலியுறுத்தியுள்ளார்.

நாட்டில் கோயில் ஹராம் என்ற எதுவும் கிடையாது. தோட்டப்புறங்களில் அதிகமான ஆலயங்கள் இருந்துள்ள நிலையில் அவை தனியார்களுக்கு விற்கப்பட்டது. அது எப்படி கோயில் ஹராம் ஆக முடியும் என்று டத்தோஸ்ரீ சரவணன் கேள்வி எழுப்பினார்.

தைப்பிங் மருத்துவமனை வளாகத்தில் இருக்கும் ஒரு ஆலயம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட ஒரு கடிதத்தில்
அந்த ஆலயத்தை கோயில் ஹராம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டில் கோயில் ஹராம் என்று எதுவும் இல்லை என்று தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.

நாடு தழுவிய நிலையில் முன்னோர்கள் கடந்த காலங்களில் அமைத்த அதிகமான ஆலயங்கள் தோட்டப் பகுதிகளில் இருந்தன. இந்த ஆலயங்கள் ஆங்கிலேயே, ஜப்பான் ஆட்சிக் காலங்களில் அமைக்கப்பட்ட நிலையில் மக்கள் இந்ந ஆலயங்களை அமைத்து வழிப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் காரணமாக இத்தகைய ஆலயங்கள் தற்போது வெளியே தெரியவந்து பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கின்றன. இவை வேறு விவகாரம் என்ற நிலையில் மக்கள் மத்தியில் ஒரு பொறுப்புமிக்க அமைப்பாக அரசாங்க நிறுவனங்கள், துறைகள் கருதப்படும் நிலையில் அவை கோயில் ஹராம் என்ற வார்த்தையை உபயோகிப்பது முறையல்ல என்பதால் அரசு துறைகள் கோயில் ஹராம் என்ற சொல்லை பயன்படுத்தக் கூடாது என்று டத்தோஸ்ரீ சலவணன் பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த Kuil Haram என்ற சொல்லை பயன்படுத்தி இந்திய சமுதாயத்தை மேலும் மேலும் காயப்படுத்த வேண்டாம். இந்த விவகாரம் தொடர்பில்
பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

இந்த கோயில் ஹராம் என்ற சொல்லை யாரும் பயன்படுத்தக் கூடாது என்று பிரதமர் அன்வார் உத்தரவிட வேண்டும் என்று டத்தோஶ்ரீ எம்.சரவணன் அக்கடித்த்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button