InternationalMalaysia

அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பு மலேசியா மாற்று வழிகளை கண்டறியும் பிரதமர் அன்வார் அறிவிப்பு

அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பு
மலேசியா மாற்று வழிகளை கண்டறியும் பிரதமர் அன்வார் அறிவிப்ப

கோலாலம்பூர்,ஏப்.22-
அமெரிக்கா விதித்துள்ள கூடுதல் வரியை எதிர்கொள்ளும் வகையில் நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாக்கும் நிலைப்பாட்டை மலேசியா முன்னிலைப்படுத்தும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியிருப்பது சிறந்த அணுகுமுறை என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

MITI எனப்படும் வர்த்தக முதலீடு, தோட்ட தொழில்துறை அமைச்சு அமெரிக்காவுடன் தொடர்ந்து ஆலோசனைகளை நடத்தி, ஏற்றுமதி சந்தைகளை கவனிக்கவும் உள்நாட்டு பொருளாதார சீர்திருத்தங்களை முடுக்கி விடவும் முயற்சிக்கும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் அறிவித்துள்ளது அந்த வரி அதிகரிப்பை எதிர்கொள்ளும் அற்றலை மலேசியாவுக்கு கொடுக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.

“சர்வதேச பொருளாதார சூழல் மிகவும் நிலைகுலைந்துள்ளது. இருப்பினும், மலேசியா உறுதியாக தன்னை நிலைநாட்டியுள்ளது. வரிகளுக்கு பதிலடி கொடுக்காமல் நமது நாட்டின் நலன்களை முன்னிலைப்படுத்துவதே நமது உள்நாட்டு நோக்கம் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டுள்ளதானது நம்மால் அந்த வரி உயர்வை எதிர்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக பொருளாதார வல்லுநர் ஒருவர் தெரிவித்தார்.

அமெரிக்கா விதித்த வரிகளுக்கு பதிலடியாக வரி விதிப்பதற்குப் மலேசியா எண்ணம் கொண்டிருக்கவில்லை. அமெரிக்காவின் வரிகளால் ஏற்படும் தாக்கங்களுக்கு எதிரான மலேசியாவின் நடவடிக்கைகள் மற்றும் எதிர்பார்ப்புகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக அமைந்திருந்தன.

நமது முதன்மையான நோக்கம் நாட்டு வர்த்தகத்தின் உறுதித்தன்மையை பலப்படுத்துவது, தற்போதைய அரசியல் அபாயங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை வடிவமைத்தல் மற்றும் மலேசியர்களின் பொருளாதார நலன்களையும் வேலைவாய்ப்புகளையும் பாதுகாக்க உதவுவதில் இருக்கிறது என்று பொருளாதார நிபுணர்கள் கருத்துரைத்துள்ளனர்.

Pasukan Petugas NGCC குழுவின் முதலாவது கூட்டம் விரைவில் நடைபெறவுள்ளதாகவும், இதில் MITI, MIDA, MATRADE, மற்றும் முன்னணி தொழில்துறை தலைவர்கள், பொருளாதார நிபுணர்கள் மற்றும் கொள்கை வல்லுநர்கள் உள்ளடக்கப்படுவார்கள் என Tengku Zafrul தெரிவித்தார்.

இந்த பிரதமரின் ஒவ்வொரு அணுகுமுறையும் முடிவும் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார சூழலுக்கு ஏற்ப தகுதியாக இருக்க உறுதிசெய்யும்.
இந்த வகையில் தேசிய NGCC எனும் புவி பொருளாதார நடவடிக்கை மையத்தின் பணிக்குழுவின் கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்று அந்த பொருளாதார வல்லுநர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

மலேசியாவின் பொருளாதார முன்னேற்றத்திற்கு இந்த தீர்மானங்கள் புதிய பாதையை அமைக்க உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது .

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button