
” பிச்சையெடுப்பது , நொறுக்குத்தீனி விற்பது ” போன்ற சம்பவங்களை மாநில காவல்துறை துடைத்தொழிக்க திட்டவட்டம் !
தேசம் செய்திகள் கவிஅரசன் அன்பரசன்
மலாக்கா , ஏப். 22-
பொது இடங்களில் குறிப்பாக வங்கி ஓரங்களில் , சந்தைகளில் , ஆள்நடமாட்டம் ஒன்றுகூடும் இடங்களில் சம்பந்தப்பட்ட பொறுப்பற்ற கும்பல் பிச்சையெடுப்பது மற்றும் நொறுகுத்தீனி விற்பதை வழக்கப்படுத்தி வருகின்றனர்.
இந்த பழக்கத்தை முற்றாக துடைத்தொழிக்க மாநில காவல்துறை திட்டவட்டமாக உறுதிசெய்துள்ளதாக மாநில காவல்துறை தலைவர் டத்தோ சுல்காய்ரி முக்தார் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
மக்களிடையே அனுதாபத்தைப் பெறுவதன் மூலம் பணம் சம்பாதிக்க இதுபோன்ற யுத்திகளை இக்கும்பல் தங்களது கைவரிசையைக் காட்டுகின்றனர்.

இதுபோன்ற சம்பவங்கள் மாநிலத்தின் நற்பெயரை ஊறுவிளைவிக்கும் என்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை.மலாக்காவிற்கு வருகைப்புரியும் ஆண்டு 2026 நீட்டிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து இதுபோன்ற அசம்பாவிதங்களை முற்றுகையிட மாநில காவல்துறை தொடர்ந்து கண்கானிப்பு பணியை மேற்கொள்கிறது.சமீபத்தில் இச்சம்பவம் தொடர்பாக ஒரு தாய்லாந்து நபரைக் கைது செய்ததாகவும், மலாக்காவைச் சுற்றியுள்ள வங்கிகளில் பிச்சை எடுப்பது,நொறுகுத்தீனி விற்பதாக சுல்காய்ரி கூறினார்.
இக்கும்பலில் 43 முதல் 76 வயதுக்குட்பட்ட 11 தாய்லாந்து பெண்களை மீட்டு ,தத்தம் சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். இதுபோன்ற பிரச்சினையைச் சமாளிக்க வழக்கமான நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு மட்டுமல்லாமல், தகவல்களை வழங்க முன்வர பொதுமக்களின் ஒத்துழைப்பையும் மலாக்கா காவல்துறை கேட்டுக் கொள்வதாக மாநில காவல்துறை தலைவர் சுல்காய்ரி தெரிவித்தார்.



