
பண்டார் துன் ரசாக் கெஅடிலான் தொகுதி உதவித் தலைவர் தேர்தல் பிரின்ஸ் ஜோனதன் வேலா வெற்றி
கோலாலம்பூர் ஏப். 22-
பண்டார் துன் ரசாக் கெஅடிலான் தொகுதி தேர்தலில் உதவித் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட இளம் வேட்பாளர் பிரின்ஸ் ஜோனதன் வேலா வெற்றி பெற்றுள்ளார்.
உதவித் தலைவர் பதவிக்கு மொத்தம் ஐந்து பேர் போட்டியிட்டனர். இதில் பிரின்ஸ் ஜோனதன் வேலா 766 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

பண்டார் துன் ரசாக் மக்களுக்கு நிறைவான சேவைகளை வழங்கி வரும் இவரின் வெற்றி எதிர்பார்த்த ஒன்று என்றாலும் ஐந்து முனை போட்டியில் வாகை சூடியது மிகவும் பாராட்டுக்குரியது.
பண்டார் துன் ரசாக் கெஅடிலான் தொகுதி தலைவர் தேர்தலில் டத்தோ அஸ்மான் மீண்டும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பிரதமரின் அரசியல் செயலாளராக இருக்கும் டத்தோ அம்மானின் உதவியாளர் பிரின்ஸ் ஜோனதன் வேலா ஆவார்.
தன்னை நம்பி வாக்களித்த கெஅடிலான் உறுப்பினர்களுக்கு பிரின்ஸ் ஜோனதன் வேலா தமது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டார்.



