
பேராவில் மின்னியல் சிகரேட் விற்பனைக்கு தடை விதிக்கபட்டலாம் சிவநேசன் கோடிகாட்டினார்
ஈப்போ,ஏப்.25-
மின்னியல் சிகரேட்டில் போதைப் பொருள் ரசாயணங்கள் கலக்கப்படுவதாக போலீஸ் தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளதால் அதனை பேராவிலும் தடை செய்யபடலாம் என்று மாநில சுகாதாரம், மனிதவளம், தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் இந்திய சமூக விவகாரங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் அ. சிவநேசன் கோடிகாட்டியுள்ளார்.
அதனை திரெங்காணு மாநில விற்க தடைவிதித்துள்ள. பேராவிலும் அது அமலாக்கத்திற்கு கொண்டு வரலாம் என்று சிவநேசன் கூறினார்.
அது தொடர்ரபாக அறிக்கை ஒன்று தாக்கல் செய்ய மாநில சுகாதார இலாகா இயக்குனரிடம் பணித்துள்ளதாகவும்.
அந்த அறிக்கை மாநில ஆட்சிக் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதிடன் இவ்வாண்டு அக்டோபர் மாதம் அதனை தடை செய்யப்படலாம் என்று சிவநேசன் தெரிவித்தார்.

அதனை தடை செய்ய தமக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை , முறையே தடை செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று விளக்கமளித்தார்.
ஈப்போவில் உள்ள ராஜா பெர்மைசூரி பைனும் மருத்துவ மனை பார்வையாளர்கள் வாரிய குழுவினர்களுக்கு
( ahli lembaga pelawat hospital) நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்துக்கொண்டப் பின்னர் சிவநேசன் அவ்வாறு சொன்னார்.
இந்த நியமனத்தில் 20 நபர்கள் இடம் பெற்றுள்ளனர், அவர்களில் வழக்கறிஞர் மு. கமலநாதன், சி. பாலகிருஷ்ணன், எஸ். குமார் ராவ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
அம்மூவரில் ஒருவர் ஈப்போ இந்து சைவ நிற பணி மன்றத்தைச் சேர்ந்த ஒருவர் நியமனம் செய்யபட்டுள்ளார்.
பேராவில் உள்ள அனைத்து மருத்துவ மனைகளிலும் நியமனம் செய்யப்படும்
மனை பார்வையாளர்கள் வாரிய குழுவில் ஒருவர் இந்து சமய தொடர்புடைய இயக்க பிரதிநிதிகள் இடம் பெறுவர் என்று குறிப்பிட்டார்.
அவர்களின பணி மருத்துவ மனைகளில் இறக்கும் ஆதரவற்றவரலகளை அடக்கம் செய்ய உதவிகள் வழங்குவது மற்றும் இந்து சமய மக்களுக்கு உதவிகள் வழங்குவது அடங்கும் என்றார் சிவநேசன்



