Malaysia

புத்ரா ஹைட்ஸ் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக BUTTON & BOWS நிறுவனத்தின் நன்கொடை முகாம் பூனை உணவுகளுக்கும் 25 விழுக்காடு வரை சிறப்புக் கழிவு!!

புஞ்சாக் ஆலாம், ஏப். 25-
மலேசியாவில் புகழ்பெற்ற பூனை உணவு தயாரிப்பு நிறுவனமான Button & Bows, புத்ரா ஹைட்ஸில் அண்மையில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் ஏப்ரல் 26 மற்றும் 27, 2025 ஆம் தேதிகளில் சிறப்பு நன்கொடை கிடங்கு விற்பனை நிகழ்வை நடத்தவுள்ளது.

இந்த நிகழ்வில், Button & Bows நிறுவனத்தின் அனைத்து பூனை உணவுகளுக்கும் 25% வரை சிறப்புக் கழிவு வழங்கப்படும். இந்த இரண்டு நாட்களில் கிடைக்கும் முழு வருமானமும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நன்கொடையாக வழங்கப்படும் என நிறுவனம் உறுதியளித்துள்ளது.

மேலும் Shopee, Lazada மற்றும் TikTok Shop போன்ற ஆன்லைன் தளங்களிலும் 10% வரை கூடுதல் சலுகை வழங்கப்படும். இந்த சலுகை மே 2025 வரை நீடிக்கப்படும் என்றும், நன்கொடை இலக்கு அடையப்படும் வரை இந்த முயற்சி தொடரும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சிலாங்கூர் Menteri Besar டத்தோ ஸ்ரீ அமிருடின் பின் ஷாரி அவர்களிடம் இந்த திட்டம் குறித்து தகவல் வழங்கப்பட்டதுடன், அவருடைய அலுவலகத்திலிருந்து ஆதரவும் கிடைத்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

“தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் கதைகள் எங்களை மிகுந்த கவலையடையச் செய்துள்ளன. மலேசியராக நாம் அனைவரும் சமூகத்திற்கு உதவ வேண்டும். இந்த முயற்சி நற்பணிக்காக மட்டுமல்ல, சமூகத்துக்கான ஒற்றுமையை உருவாக்கும் வழிகாட்டியாகவும் அமையும்,” என Button & Bows நிறுவனத்தின் டேவ் கில் தெரிவித்துள்ளார்.

நிகழ்வின் விவரங்கள்:
* தேதி: ஏப்ரல் 26 – 27, 2025
* நேரம்: காலை 10:00 மணி – மாலை 6:00 மணி
* இடம்: 21, Jln Eco Perindustrian 1/3C, Eco Perindustrian 5, 42300 Puncak Alam, Selangor

பூனை பிரியர்களே! உங்கள் செல்லங்களுக்கு தரமான உணவை வாங்கி சேமித்து வைக்கவும்; ஒரு அர்த்தமுள்ள சமூக நலத் திட்டத்திற்கு உங்கள் பங்களிப்பை வழங்கவும்!

மேலும் தகவலுக்கு:
* அகப்பக்கம்: buttonsandbows.com.my
* சமூக ஊடகம்: Facebook – Button & Bows Malaysia
* தொடர்புக்கு: Dave Gill (012 286 9187)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button