Malaysia

சிறந்த முடிவுகள் முன்னேற்றத்திற்கு அடிப்படையாக இருக்க வேண்டும் ஃபத்லினா கருத்து

காஜாங், ஏப்.25-
2024 மலேசிய கல்விச் சான்றிதழ் (SPM) முடிவுகள் ,வரலாற்றில் சிறந்ததாகக் கருதப்படுவதால் எதிர்காலத்தில் இதை அடிப்படையாக கொண்டு மேலும் கல்வி அமைச்சகம் (KPM) இன்னும் சிறந்த தேர்வு முடிவுகளுக்கான வழியை மேம்படுத்தும் என்று கல்வியமைச்சர் ஃபத்லினா சிடேக் கூறினார் .

இந்த 2024 SPM தேர்வு முடிவுகள், 2013 ஆம் ஆண்டைக் காட்டிலும் சிறந்த சாதனையைப் பதிவு செய்துள்ளன, தேசிய தரப் புள்ளி சராசரி (GPK) 2023 இல் 4.60 ஆக இருந்ததை விட 4.49 ஆக உள்ளது.

இம்முன்னேற்றத்தின் வழி தொடர்ந்து மாணவர் செயல்திறன் மேம்படுவதை உறுதி செய்வதற்கு இன்னும் பல புதிய அணுகுமுறைகள் அடையாளம் காணப்பட வேண்டும் என்று அதன் அமைச்சர் ஃபத்லினா சிடேக் கூறினார்.

“இவ்வருட SPM தேர்வு முடிவுகள் வரலாற்றில் சிறந்த முடிவுகளில் ஒன்றாகும். இன்று காலை முடிவுகளைப் பெற்ற அனைத்து SPM 2024 வேட்பாளர்களுக்கும் எங்கள் நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்”.

“மாணவர்களின் வெற்றிக்கு ஒட்டுமொத்தமாக ஆதரித்த, ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் சமூகத்தின் அனைத்து உறுப்பினர்களையும் நான் வாழ்த்த விரும்புகிறேன். இந்த முடிவு மிகவும் பெருமையாக உள்ளது என ஃபத்லினா சீடேக் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button