Malaysia

இரக்கமில்லாமல் வீட்டை உடைப்பதா?மனிதநேயம் எங்கே போனது? சம்பவ இடத்திற்கு நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் வராதது ஏன் டத்தோ கலைவாணர் கேள்வி 

தேசம் செய்திகள் குணாளன் மணியம்

ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்

சிலிம்ரீவர் மே 21-

நாட்டில் ஏழை எளிய மக்களின் நலனில் அக்கறை காட்ட வேண்டிய அரசு 47 ஆண்டுகள் வாழ்ந்த ஒரு மூதாட்டி குடும்பத்தின் புறம்போக்கு வீட்டை உடைத்து தரைமட்டமாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக நம்பிக்கை இயக்கத்தின் தலைவர் டத்தோ டாக்டர் கலைவாணர் கூறினார்.

சிலிம்ரீவர் வட்டாரத்தில் ஜாலான் துரோலாக், பத்து 2 கம்போங் சண்முகம் புறம்போக்கு பகுதியில் கடந்த 47 ஆண்டுகளாக குடியிருந்து வந்த புற்றுநோயினால் அவதியுற்று படுத்த படுக்கையாய் இருந்த ஒரு மூதாட்டியை வெளியே போட்டு வீட்டை உடைத்த சம்பவம் நடப்பு பேராக் மாநில அரசாங்கத்தின் மீது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக டத்தோ கலைவாணர் தேசம் ஊடகத்திடம் தெரிவித்தார்.

நாடு சுதந்திரம் அடைந்து நாம் எங்கேயோ போய்விட்ட நிலையில் இன்று ஒரு குடும்பம் நடுத்தெரிவில் நிற்பதற்கு யார் பொறுப்பு? இந்த பகுதியில் கடந்ம 47 ஆண்டுகளாக நோய்வாய்பட்ட வயதான தாய்தந்தையர், தம்பியுடன் கணவரை இழந்த ஒரு மாதுவுக்கு ஒரு மலிவுவிலை வீடு வழங்க மறுத்த மாநில அரசின் போக்கை டத்தோ கலைவாணர் கண்டித்துள்ளார்.

இந்த மாதுவின் கணவர் 9 மாதங்களுக்கு முன்பு இறந்ந்து விட்டார். கணவர் இருக்கும் போது எல்லாம் நன்றாகத்தான் இருந்தது. ஆனால், எல்லாம் தற்போது தலைகீழாக மாறி விட்டதாக இந்த வீட்டில் குடியிருந்த மாது தெரிவித்தார்.

இந்த வீட்டை சட்டத்திற்கு உட்பட்டு உடைத்திருந்தாலும் அவர்களுக்கு ஒரு மலிவு விலை வீட்டை வழங்கி விட்டு உடைத்திருக்கலாம். அதைவிடுத்து காலையிலளயே வந்து வீட்டை உடைத்து இவர்களை நடுத்தெருவில் விட்டது வேதனையளிக்கிறது. அதுவும் கர்பப்பை புற்றுநோயால் அவதியுற்று வரும் மூதாட்டியை கட்டிலோடு தூக்கி வெளியே போட்டு விட்டு வீட்டை உடைத்தது ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளதாக டத்தோ கலைவாணர் சொன்னார்.

இந்த குடும்பம் 20 ஆண்டுகளாக நிலம் கேட்டு விண்ணப்பம் செய்துள்ளது. ஆனால், எதுவும் நடக்கவில்லை. இந்தியர்கள் நம்பி வாக்களித்துள்ளனர். ஆனால், அவர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. தற்போது வேலியே பயிரை மேய்வது போல தற்போது ஆங்காங்கே வீடுகள் உடைக்கப்பட்டு வருகின்றன. இதற்கு பேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் பதில் சொல்ல வேண்டும் என்று டத்தோ கலைவாணர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் பலமுறை பேச்சு நடத்தப்பட்டுள்ளது. இந்த புறம்போக்கு நிலப்பகுதி மேம்பாட்டு திட்டத்திற்காக எடுத்துக் கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், அப்படியொரு திட்டம் எதுவும் இல்லை. இந்த இடத்தை மாநில இந்திய ஆட்சிக்குழு உறுப்பினர் உடைக்கச் சொன்னதாக கூறப்படுவது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. இது குறித்து அவர் பதில் சொல்ல வேண்டும். இந்த வீட்டிற்கு நோட்டீஸ் மட்டுமே வழங்கப்பட்டதாகவும் வீட்டை உடைக்க மாட்டார்கள் என்று உறுதியளித்துள்ளனர். ஆனால், அவர்கள் பொய் சொல்லி விட்டதாக டத்தோ கலைவாணர் கூறினார்.

இந்த குடும்பம் நடுத்தெருவில் நின்ற நிலையில் நம்பிக்கை இயக்கத்தின் தலைவர் டத்தோ கலைவாணர் வாடகை வீட்டிற்கு 3 ஆயிரம் வெள்ளி வழங்கி அவர்களை வாடகை வீட்டில் குடியேற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button